Home செய்திகள் சிறீலங்கா அரசிடம் நீதி கிடைக்காத நிலையிலேயே சர்வதேசத்திடம் நீதி கோரி வருகின்றோம் -பா.அரியநேத்திரன்

சிறீலங்கா அரசிடம் நீதி கிடைக்காத நிலையிலேயே சர்வதேசத்திடம் நீதி கோரி வருகின்றோம் -பா.அரியநேத்திரன்

கடந்த 72வருடமாக இந்த நாட்டில் நாங்கள் நீதியை கோரிவருகின்ற நிலையில், அதற்கான எந்த நீதியும் கிடைக்காத ஏமாற்றமான நிலையிலேயே இன்று சர்வதேசத்திடம் நீதி கோரி போராடி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

IMG 0307 சிறீலங்கா அரசிடம் நீதி கிடைக்காத நிலையிலேயே சர்வதேசத்திடம் நீதி கோரி வருகின்றோம் -பா.அரியநேத்திரன்

சிறீலங்காவில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு நீதிவேண்டி முன்னெடுக்கப்படும் உணவு தவிர்ப்பு போராட்டம் எட்டாவது நாளாகவும் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் முன்பாக அன்னை பூபதி உயிர்நீர்த்த இடத்தில் இருந்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்த போராட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், தமிழ் தேசியம் சார்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,மதத் தலைவர்கள் உட்பட பலர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

எட்டாவது நாளாகவும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.

இந்நிலையில், வடக்கில்  பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டு உணவு தவிர்ப்பு போராட்டத்தை சுழற்சி முறையில் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

 

சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர் முடிவடையும் வரை தொடர்ச்சியாக இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையில், அரசியல்வாதிகள் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்வதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை  எனக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பிரித்தானியாவில் சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு நீதிவேண்டிய உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார். அவருடைய இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version