சிறீலங்காவை புறம்தள்ளிய ஐரோப்பிய ஒன்றியம்

கோவிட்-19 நோய் சிறீலங்காவில் அதிகளவு பரவாதபோதும், ஐரோப்பிய ஒன்றியம் தமது எல்லைகளுக்குள் அனுமதிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சிறீலங்காவை புறக்கணித்துள்ளது.

கொரோனா நோய் பாதிப்பை தொடர்ந்து மூடப்பட்ட தமது நாடுகளின் எல்லைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தற்போது திறப்பதற்கு தீர்மானித்துள்ளன. இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறீலங்காவின் பெயர் இடம்பெறவில்லை..

எந்த நாடுகள் பாதுகாப்பானவை என்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளக ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. சுகாதரத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் எரிக் மாமெர் தெரிவித்துள்ளார்.