சிறீலங்காவில் உள்ள சீனா மக்கள் துன்புறுத்தப்படுவதாக சீனா குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை தொடர்ந்து சிறீலங்காவில் உள்ள சீனா குடிமக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதுடன், சில சமயங்களில் துன்புறுத்தப்படுவதாக சீனா அதிகாரிகள் சிறீலங்கா அரசிடம் தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவு விடுதிகள், ஆடம்பரவிடுதிகள், வைத்தியசாலைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றிற்கான அனுமதிகள் சீனா மக்களுக்கு சில இடங்களில் புறக்கணிக்கப்படுவதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

அதேசயம், சீனாவில் இருந்து கொழும்பு திரும்பும் சீனா மக்கள் குறித்து சிறீலங்கா மக்கள் அச்சமடையத் தேவையில்லை என கொழும்பில் உள்ள சீனா தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சீனாவின் முறைப்பாடு தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெறும் அவசர நடவடிக்கை பிரிவின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.