சிறீலங்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

137 Views

சிறீலங்காவில் கொரோனா தொற்றுநோயின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இன்று (24) அங்கு 35 சிறீலங்கா கடற்படையினர் உட்பட 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 11 பேர் கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தையிலும் மற்றும் மருதனை, கொழும்பு கிழக்கு ஆகிய பகுதிகளில் ஒவ்வொருவரும் உள்ளடங்கியுள்ளனர். தற்போது சிறீலங்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்துள்ளது.

வெலிசரை கடற்படை முகாமில் உள்ள கடற்படையினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு அண்மையாக வாழும் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். நேற்று அங்கு கடமையாற்றிய 29 படையினர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

எனினும் மக்களை அச்சமடைய வேண்டாம் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply