சிறீலங்காவின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் சீனாவும், பிரித்தானியாவும் தீவிரம்

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் தமக்கு இடையிலான போட்டிகளை மறந்து சிறீலங்காவுக்கு உதவி செய்து பெரும்பான்மை சிங்கள சமூகத்தை காப்பாற்றுவதற்கு போராடி வருகின்றன.

இந்த நிலையில் சிறீலங்காவின் பாதுகாப்புக்களை முன்னிட்டு 60 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான எக்ஸ்ரே இயந்திரங்கள் உட்பட பல பாதுகாப்புச் சாதனங்களை சீனத் தூதுவர் சிறீலங்காவுக்கு நேற்று (19) வழங்கியுள்ளார்.

சிறீலங்காவின் நாடாளுமன்றத்தை பாதுகாப்பற்கே அவை வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீங்கா காவல்துறையினருக்கும், படையினருக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடர்பில் பயிற்சிகளை வழங்குவதற்கு என பிரித்தானியாவின் படை அதிகாரிகள் சிறீலங்கா வந்துள்ளதாகவும், அவர்கள் ஒருவாரம் அங்கு தங்கியிருப்பார்கள் எனவும் சிறீலங்காவுக்கான பிரித்தானியாத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிவரும் இந்த நாடுகள் சிங்கள மக்களை பாதுகாப்பதற்கு ஒருங்கிணைந்து பணியாற்றி வருவது தமிழ் மக்களிடம் அனைத்துலகசமூகம் தொடர்பில் அவநம்பிக்கைகளைத் தோற்றுவித்துள்ளது.