சிரியாவில் இடம்பெற்ற திடீர் ஆட்சி மாற்றம் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தினாலும் 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உதவியுடன் இயங்கிய ஆப்கானிஸ் தானின் அஸ்ரப் கானி அரசு தலிபான்களிடம் வீழ்ந்தது போன்றே சிரியாவும் 11 நாள் சமரில் வீழ்ந்துள்ளது. அதாவது தலி
பான்கள் மேற்கொண்ட அதே போரியல் உத்திகள் தான் சிரியாவிலும் பயன்படுத்தப்பட்டது போன்றே உணரப்படுகின்றது.
நவம்பர் 27 ஆம் நாள் சிரியாவின் இலிப் பகுதியில் இருந்து துருக்கியின் ஆதரவு கொண்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம்(எச்.ரி.எஸ்) என்ற அமைப்பும், சிரிய தேசிய இராணுவம்(எஸ்.என்.ஏ) என்ற அமைப்பும் ஆரம்பித்த தாக்குதல் சிரியாவின் மிகப்பெரும் விவசாய பிரதேசமான லெப்பொ பகுதியை சில தினங்களில் கைப்பற்றி, பின்னர் ஹமா பகுதி ஊடாக நகர்ந்து சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் பகுதிக்கு அண்மையான கோம்ஸ் நகரத்தை கடந்த வாரம் சனிக்கிழமை(7) அடைந்த போது சிரியா வீழ்ந்துவிட்டது என்ற எண்ணங்கள் பலரின் மனதிலும் எழுந்திருந்தன.
அதேசமயம், தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் இயங்கு நிலையில் இல்லாது இருந்த ஆயுதக்குழுக்களும் தாக்குதலை ஆரம்பித்ததால் கடந்த 13 வருடங்களாக உள்நாட்டு போரை சந்தித்துவந்த பசர் அல் அசாட்டின் அரசு வீழ்ந்தது. ரஸ்யா அவரை பாதுகாப்பாக தனது நாட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தது.
இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்ற கேள்விகள் பலரிடமும் உண்டு. ஆனால் அதற்கான காரணங்கள் பல, கடந்த பல வருடங்களாகவே அங்கு பொருளாதார நெருக்கடி, மனிதாபிமான நெருக்கடிகள் மிக அதிகமாகவே காணப்பட்டன. 90 விகிதமான சிரிய மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்துவந்தனர். சிறுவர்களும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டனர். உணவுக்காக கடன் வாங்கியவர்கள் அதனை அடைக்கமுடியாது திணறினர். தலைநகரில் கூட 20 மணிநேர மின்சாரத்தடை இருந்தது. இந்த வருடத்தின் நடுப் பகுதியில் மின்சாரக்கட்டணம் 585 விகிதமாக உயர்ந்திருந்தது.
கடந்த 13 வருடங்களாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப்போரில் ஏறத்தாழ 500,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 1.4 மில்லியன் மக்கள் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளனர். சிரியாவின் தற்போதைய சனத்தொகையும் 20 மில்லியனாக குறைந்துள்ளது.
சிரியாவின் எண்ணெய் வயல்களை குருதிஸ் படையினரின் துணையுடன் அமெரிக்கா ஆக்கிர
மித்தது, பொருளாதாரத் தடைகள் வெளிநாட்டு கடன்களை தடுத்தது. வர்த்தகம் செய்வதற்கு சிரியாவிடம் எதுவும் இருக்கவில்லை. இராணு வத்தினரின் ஒரு மாதச் சம்பளம் வெறும் 7 டொலர்கள் மட்டும் தான், ஜெனரல் தர அதிகாரிகள் கூட 40 டொலர்களை தான் ஊதியமாகப் பெற்றனர். எனவே தான் 170,000 இராணுவத்தினரும் சமரை எதிர்கொள்ள முடியாத மனவலிமை குன்றிய நிலையில் ஆயுதங்களைக் கைவிட்டு தப்பியோட நேர்ந்தது.
உலகின் இரு துருவங்களாக மாற்றம் பெற்றுள்ள சமநிலையை பேணுவதற்காக ரஸ்யாவும் இந்த தடவை தனக்கு சாதகமற்ற களமுனைகளில் அதிக கவனம் செலுத்த முற்படவில்லை. எனவே தான் 2015 ஆம் ஆண்டு அசாத்தை காப்பாற்றியது போல இந்த முறை அது களமிறங்கவில்லை. அதாவது சிரிய சமரை அது பிறிதொரு நாளுக்கு ஒத்திவைத்துள்ளது. எனினும் அதிபரைக் காப்பாற்ற அது தவறவில்லை. ஹிஸ்புல்லாக்களும், இஸ்ரேலுடனான மோதலில் கவனத்தை குவித்துள்ளதால் சிரியாவை பொருட் படுத்தவில்லை.
ஈரானுடன் தொடர்புகளை பேணினால் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என் பதால் ஈரான் உதவி வழங்க முன்வந்தபோதும் சிரியா அதனை மறுத்திருந்தது.
சிரியாவின் இலிப் பகுதியில் அசாதார ணமான நடமாட்டங்கள் காணப்படுவதாகவும், அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும் எனவும் ஈரான் மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் சிரியாவை 3 மாதங்களுக்கு முன்னர் எச்சரித்ததாக ஈரானின் ஜெனரல் Amir Hussein Haji Nasiri தெரிவித்துள்ளார். ஆனால் சிரிய அதிபர் அதனை புறம்தள்ளியதுடன், யாரையும் நம்ப மறுத்ததே தற்போதைய நிலைக்கு காரணம் என ஈரான் தெரிவித்துள்ளது.
தற்போது சிரியா வீழ்ந்துள்ளது, இந்த நிலையில் தலிபான்கள் பாணியில் சிரியாவை கைப்பற்றலாம் என நினைக்கின்றது எச்.ரி.எஸ். ஆனால் சிரியா ஆப்கானிஸ்தான் அல்ல என்பதே உண்மையானது. ஏனெனில் சிரியா மிகவும் சிக்கலான இனப்பிரிவுளைக் கொண்ட தேசம். அவர்களுக்கு இடையில் நீண்டநாள் முறுகல்களும் உள்ளன. எஸ்.என்.ஏ மற்றும் எச்.ரி.எஸ் என்பன இலிப் பகுதியை தளமாகக் கொண்ட துருக்கியின் ஆதரவு கொண்ட படை யினர்.
வடகிழக்கில் மற்றும் அலவைரிஸ் கரை பகுதிகளில் அமெரிக்காவின் அனுசரணையுடன் இயங்கும் குருதிஸ் அமைப் பினர் பலமாக உள்ளனர். றூஸ் என்ற பிரிவினர் தெற்கிலும், அமெரிக்காவின் ஆதரவுடன் இயங் கும் பல குழுக்கள் தென்கிழக்கிலும் உள்ளன. பாலைவனப் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தற்போதும் இயங்கி வருகின்றது.
அதாவது லிபியாவில் கேணல் கடாபியின் வீழ்ச்சியை தொடர்ந்து மேற்குலகத்தால் அமைக் கப்பட்ட அரசை தூக்கி எறிந்து அங்கு பல பிரிவுகளை படைத்துறையை சேர்ந்த பல கட்டளை அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த கட்டளை அதிகாரிகளை பல வல்லரசு நாடுகள் வழிநடத்தி வருகின்றன. அமெரிக்காவும், ரஷ்யாவின், பிராந்திய அரபு நாடுகளும் அங்குள்ள கட்டளை தளபதிகளை வழிநடத்துகின்றன. லிபியாவில் உள்ள தனது ஆளுமையை பேணு வதற்காகவே சிரியாவில் ரஸ்யா தனது கடற்படை மற்றும் வான்படைத்தளத்தை அமைத்து பேணி வருகின்றது.
2015 ஆம் ஆண்டு சிரியைவை காப்பாற்றிய பின்னர். சிரியாவில் தனது கடற்படைத்தளத்தை நிறுவும் 50 வருட உடன்படிக்கை ஒன்றை ரஸ்யா ஏற்படுத்தியிருந்தது. அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் 12 போர்க் கப்பல்களை அங்கு ரஸ்யா வைத்திருக்க முடியும். அந்த முகாம் தற்போதும் உள்ளது. சிரியாவில் ஆட்சி மாறியபோதும் ரஸ்யா வின் படைத்தளத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. Khmeimim வான்படைத்தளமானது ரஸ்யாவின் அணுக் குண்டுகளை வீசும் Tu-22M3 விமானங்கள், அதிவேக இடைமறித்து தாக்குதல் நடத்தும் MiG-31K/I விமானங்கள் மற்றும் பலிஸ்ரிக் ஏவு கணைகளைக் கொண்ட தளமாகும்.
மேலும் துருக்கியின் ஆதரவு கொண்ட படையினர் ரஸ்யாவை எதிர்ப்பதை துருக்கி விரும்பாது. சிரியா வீழ்வதற்கு முன்னர் துருக்கி, ஈரான், சிரியா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் அவசரமான ஒரு மாநாட்டை நடத்தியிருந்தன. அந்த மாநாடு என்பது சிரியாவை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட மாநாடு என்றே பலரும் கருதியிருந்தனர். ஆனால் அந்த மாநாட்டில் பேசிய ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர், தனது அதிகாரத்தை மோதல்கள் இன்றி எச்.ரி.எஸிடம் அசாட் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்திருந்தார். சிரிய அதிபரை பாதுகாப்பாக வெளியேற்றும் திட்டத்தையும் வகுத்திருந்தனர்.
சிரியாவின் விரைவான வீழ்ச்சியை அமெரிக்காவும் எதிர்பார்க்கவில்லை மறுவளமாக லெப்போ பகுதியை தாண்டி எச்.ரி.எஸ் முன்நகரும் என துருக்கியும் நினைக்கவில்லை. தற்போது நிலமை யார் கையிலும் இல்லை. அமெரிக்க ஜெனரல் கிழக்கு சிரியாவில் உள்ள குருதிஸ் படையினரை சந்திக்க அவசரமாக ஓடுகின்றார். இஸ்ரேல் அவசரமாக சிரியாவின் கனரக ஆயுதங்களை அழிப்பதில் கவனம் செலுத்துகின்றது. அதாவது துருக்கி போட்ட திட்டத்தை ரஸ்யா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
சிரியாவின் வீழ்ச்சி என்பது சிரியாவுக்கான வீழ்ச்சியல்ல ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் மீளமுடியாத பொறிக்குள் தள்ளியுள்ளது. சிரிய அகதிகள் மற்றும் அகதிகள் என்ற போர்வையில் அல்கைடா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரும் ஐரோப்பிய நாடுக ளுக்குள் ஊடுருவலாம் என்ற அச்சம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் சிரிய அகதிகளுக்கான அனு மதிகளை அவசரமாக மூடியுள்ளன.
சதுரங்க ஆட்டத்தில் சில சமயங்களில் நாம் நகர்த்தும் காய்கள் எமக்கு எதிராக மாறி விடுவதுண்டு அதனை தான் சிரியாவின் களமுனை எதிர்காலத்தில் உணர்த்தப்போகின்றது போல.