தற்போது சிரியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல்களில் சிரிய படையினருக்கு உதவும் பொருட்டு தனது படையை அனுப்புவதற்கு ஈரான் தயாராக உள்ளதாக அதன் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அரட்க்சி இந்த வாரம் தெரிவித்துள்ளார்.
சிரிய அரசு கோரிக்கை விடுத் தால் முழு அளவிலான படை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு ஈரான் தயாராக உள்ளது. சிரியாவில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தவிர்ப் பதற்கு நாம் இயன்ற அளவில் பாடுபட்டு வருகின்றோம். அங்கு ஒரு நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும். ஆயுதக்குழுக்களின் விரிவாக்கம், ஈராக், துருக்கி மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளை பாதிப்பதை விட ஈரானையே அதிகம் பாதிக்கும்.
சிரியாவில் ஒரு நிரந்தர அமைதி ஏற்படவேண்டும் என்றால் முதலில் சிரியாவில் இருந்து துருக்கி படையினர் வெளியேற வேண்டும். இது தொடர்பான பேச்சுக்களை மேற்கொள்ள நான் மொஸ்கோவிற்கு செல்லவுள் ளேன். என கட்டார் ஊடகத்திற்கு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹயற் ரகீர் அல் சாம் எனப்படும் அல்கைட குழுவுடன் இணைந்து இயங்கும் ஆயுதக் குழுவினர் கடந்த வாரம் முதல் சிரியாவின் இலிப் என்ற பகுதியில் இருந்து முன்நகர்ந்து அலிப்போ பகுதி மீது பெரும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக ரஸ்யாவின் வான்படை உதவியுடன் சிரியா தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
2020 ஆம் ஆண்டு ரஸ்யாவுடன் மேற் கொண்ட போர் நிறுத்த பேச்சுக்களைத் தொடர்ந்து இந்த ஆயுதக்குழுக்கள் துருக்கி யின் பாதுகாப்புடன் இந்த பகுதிகளில் நிலை கொண்டிருந்தன. துருக்கி, சிரியா, ரஸ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இணைந்து கசகஸ்தானில் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாட்டை எட்டி யிருந்தன. ஆனால் தற்போது அந்த உடன்பாடு ஆயுதக்குழுவினரால் மீறப்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.