சிங்கள மொழியை சேர்த்தது இந்தியா

336 Views

யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் பெயர் பலகையில் சிங்கள மொழியை தவிர்த்து இந்தி மொழி புகுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கொழும்பு ஊடகங்கள் எழுப்பிய சர்ச்சைக்கு அஞ்சிய இந்தியா தற்போது சிங்கள மொழியை தனது பலகையில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

தென்னிலங்கையில் உள்ள சீனா நிறுவனங்கள் தமது பெயர் பலகையில் தமிழ் மொழியை புறக்கணித்துள்ள நிலையில் இந்திய தூதரகத்தின் விவகாரம் குறித்து கொழும்பு ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இந்த பெயர் பலiயில் சிங்கள மொழிக்கு பதிலாக இந்தியாவின் தேசிய மொழியான இந்தி எழுதப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அது தவறு என ஏற்றுக்கொண்டுள்ள இந்தியா சிங்கள மொழியை சேர்த்துக்கொள்ள தீர்மானித்துள்ளது.

Leave a Reply