சிங்களத் தலைமைகளிடமிருந்து தமிழர்களால் துரும்பைக் கூட பெற்றுக்கொள்ள இயலாது – புகழேந்தி தங்கராஜ்

ஈஸ்டர் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி யார் என்கிற சந்தேகம் பரவலாக இருந்துவந்த நிலையில், சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும்  ஆவணப்படம் அக் கொடிய நிகழ்வின் மர்மப் பின்னணியை உரிய சாட்சியங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறது.

இதுபோன்ற குற்றச் செயல்களைக் குறித்து விசாரிக்கும் போது, முன்விரோதம், தீவிரவாதம்,  அரச எதிர்ப்பு, இனத் துவேஷம் – என்கிற கோணங்களில் மட்டுமின்றி, இதனால் ஆதாயமடைந்தவர்கள் யார் என்கிற கோணத்திலான விசாரணையும் முக்கியம். அந்தக் கோணத்தை,  தொடர்ந்துவந்த இலங்கை அரசுகள்  அலட்சியப்படுத்தின.

batti church before bomb சிங்களத் தலைமைகளிடமிருந்து தமிழர்களால் துரும்பைக் கூட பெற்றுக்கொள்ள இயலாது - புகழேந்தி தங்கராஜ்அப்போது பதவியிலிருந்த மைத்திரிபாலா அரசு, ஈஸ்டர் குண்டுவெடிப்பைக் காட்டியே ஆட்சியைப் பிடித்த கோட்டபாய ராஜபக்ச  அரசு, இப்போதிருக்கும் ரணில் அரசு என்று அனைத்து அரசுகளும், அந்தக் கோணத்தை உதாசீனப்படுத்தின. அது தொடர்பான சந்தேகங்களைப் புறக்கணித்தன. இந்த உதாசீனமும் புறக்கணிப்பும் யதேச்சையானவை  அல்ல! திட்டமிடப் பட்டவை.  ஈஸ்டர் குண்டுவெடிப்பு எப்படித்  திட்டமிடப்பட்டதோ, அதைப்போலவே, அதுதொடர்பான விசாரணைகளில் காட்டப்பட்ட அசிரத்தையும்  திட்டமிடப்பட்டதே! மைத்திரிபாலா, கோட்டபாய ராஜபக்ச, ரணில் – என்று பெயர்கள் வெவ்வேறாக இருந்தாலும், அனைத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை அது உணர்த்தியது.

சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு,  அதுவும், சேனல் நான்கின் மூலம் உண்மைகள் வெளிப்படுத்தப்பட்ட பிறகு, பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிற பரமாத்மாவைப் போல், தன்னுடைய பேய்த்துயில் கலைத்து வாயைத் திறந்து இரண்டு வார்த்தை பேசியிருக்கிறார் சஜித் பிரேமதாஸ.   ஈஸ்டர் குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் யாரென்பதைக் கண்டுபிடிப்பது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையால் சாத்தியமில்லை – என்கிற முடிவுக்கு இந்த மனிதர் வர, நாலாண்டு கால ஆராய்ச்சி தேவைப்பட்டிருக்கிறது.

சர்வதேச விசாரணை நடத்தப்பட்டால் தான் உண்மை வெளிவரும், உண்மையான சூத்திரதாரி யாரென்பது தெரியவரும் – என்பது சஜித்தின் மிக மிகத் தாமதமான அறிவிப்பு. அவரது இந்தத் தாமதமும், திட்டமிடப்பட்ட தாமதமென்பதில் சந்தேகமேயில்லை. இந்தத் தாமதம், கள்ளத் தாமதம். இத்துணை நாட்களாக சஜித் சாதித்த மௌனம், கள்ள மௌனம்.  இதை நாம்  புரிந்துகொண்டாக வேண்டும். இவற்றிலிருந்து, மைத்திரிபாலா முதலான மூன்று மட்டைகளும், இந்த மட்டையும் வெவ்வேறல்ல என்பது தெளிவாகிறது.

Batti bomb சிங்களத் தலைமைகளிடமிருந்து தமிழர்களால் துரும்பைக் கூட பெற்றுக்கொள்ள இயலாது - புகழேந்தி தங்கராஜ்இன்று சஜித் சொல்வதைத்தான் கடந்த 14 ஆண்டுகளாக உலகத் தமிழினம் மூச்சுக்கு மூச்சு வலியுறுத்துகிறது. வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை, கொத்துக் குண்டுகளாலும், மல்டிபேரல் ராக்கெட் லாஞ்சர்களாலும், விமானக் குண்டுவீச்சுகளாலும் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான சூத்திரதாரிகள் யாரென்பதைக் கண்டுபிடிக்க, இனவாதத்தால்  செல்லரித்துப்போய்விட்ட இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறையால்  முடியாது என்பதுதான் தமிழின அழிப்புக்கு நீதி கேட்கும் நாம் முன்வைக்கிற முழுமுதல்வாதம்.

சிங்கள இனவெறி என்கிற ஒரே குட்டையில் உ ஊறிய சஜித் என்கிற இந்த மனிதருக்கு, கடந்த 14 ஆண்டுகளாக இது விளங்கவேயில்லை என்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை. அவர் உடலில் ஓடுவது, சிங்க லே! சிங்கத்தின் ரத்தம்! அது எப்படி, தமிழர் உயிர்களுக்கு நீதி கேட்கும்!

Ranil and sajith 2019.08.07 சிங்களத் தலைமைகளிடமிருந்து தமிழர்களால் துரும்பைக் கூட பெற்றுக்கொள்ள இயலாது - புகழேந்தி தங்கராஜ்தெற்காசிய நாடுகளில், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக, பெரும்பான்மை வெறி என்கிற நச்சுப்பாம்புக்குப் பாலூட்டி வளர்க்கிற அரசியல் நபும்சகர்கள் ஒருவர் இருவரல்ல….. பலர்! பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து, இதுபோன்ற ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளில் அவர்கள் இறங்குவது படுகேவலமான அரசியல் கலாச்சாரங்களில் ஒன்றாக ஆகிவிட்டது.

சொந்தச் சகோதர்களையே கொன்றுகுவித்துவிட்டு, அந்தப் படுகொலைகளுக்கு சிறுபான்மையினத்தவரைப் பொறுப்பாக்கிவிட்டு, ஆட்சி நாற்காலியில் வந்து உட்கார்ந்துகொள்கிற நயவஞ்சக அரசியல் நரித்தனம் மனித குலத்தின் பேரவலமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிற எங்கள்  இந்தியாவிலேயே இதுபோன்ற இழிவான நடவடிக்கைகளுக்குப் பஞ்சமில்லை என்கிற நிலையில், மற்ற நாடுகளைக் குறித்துச் சொல்ல  என்ன இருக்கிறது!

ஈஸ்டர் குண்டுவெடிப்புகளைக் காட்டி கோட்டபாய ராஜபக்ச என்கிற கொடியவன் அதிபராகிவிட முடிகிற இதே உத்தி தான், 2008லும் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வே ண்டும் என்பது இப்போது தெளிவாகிறது.  புலிகளுடனான சமாதான  ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக இலங்கை அரசு அறிவித்தவுடனேயே, புத்தளம் அருகில்  பள்ளிக் குழந்தைகளின் பேருந்து கண்ணிவெடி மூலம் தகர்க்கப்பட்டதையும், விடுதலைப் புலிகள் என்கிற நேர்மையான விடுதலை அமைப்பின் மீது  அதற்கான பழி சுமத்தப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது. அதைக் காட்டி வடித்த நீலிக்கண்ணீர் மூலம்தான்,  சர்வதேசத்தின் ஆதரவை இனவாத இலங்கை அரசு தேடிக் கொண்டது.

2009ல் திட்டமிட்ட இனப்படுகொலை நடந்த சமயத்தில் சர்வதேசம் சாதித்த மௌனத்துக்கான காரணங்களில், புத்தளம் பேருந்து சம்பவமும் ஒன்று. அது,  புலிகளைப் பயகரவாதிகளாகக் காட்டி, தமிழினத்தை அழிப்பதற்காக  மேற்கொள்ளப்பட்ட அப்பட்டமான சூழ்ச்சி. அதன் இன்னொரு வடிவம்தான், ஈஸ்டர் குண்டுவெடிப்புகள். முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டி, நாட்டைப் பாதுகாக்க கோட்டபாயவால் தான் முடியும் என்கிற தோற்றத்தை ஏற்படுத்துவது. இதைத்தான் சேனல் 4 அம்பலப்படுத்தியிருக்கிறது.

1983ல் நடந்த திட்டமிட்ட தமிழின அழிப்பின் போது, கொழும்பு வீதி ஒன்றில், தமிழர்கள் பயணம் செய்த பேருந்து ஒன்று பௌத்த பிக்குகளின் நேரடி மேற்பார்வையில் தீக்கிரையாக்கப்பட்டதை இப்போது நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. முன்னதாக, அதிலிருந்த தமிழர்களில் ஒருவர்கூட தப்பித்து விடக்கூடாது என்பதற்காக,  புத்தனின் பேரர்கள் பேருந்தின் கதவுகளை அடைத்துவிட்டனர். அந்தப் பேருந்துக்கு வைக்கப்பட்ட தீ, இன்னும் எம் இனத்தின்  இதயத்தில் அணையாது எரிந்துகொண்டிருக்கிற அக்கினி ஜுவாலைகளில் ஒன்று!

நிராயுதபாணிகளைத் தடுத்து நிறுத்தி, பேருந்துக்குள் அடைத்து, கண்ணெதிரில் எரித்துக் கொன்ற அந்த சிங்கள பௌத்தக்  கோழைகளுக்கும், விமானப்படை  வைத்திருந்த முதல் விடுதலை இயக்கம் என்கிற பெருமையைப் பெற்றிருந்தும், அந்த விமானங்கள் மூலம் அலரி மாளிகையை மட்டுமே குறிவைக்க முயன்ற புலிகள் என்கிற பேரா ண்மைபொருந்திய தமிழ்ப் போராளிகளுக்கும் இருக்கிற வித்தியாசத்தை எடுத்தியம்ப, உலகின் வேறெந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை.  தமிழில் மட்டும் தான் இருக்கிறது ‘பேராண்மை’ என்கிற பெருமிதத்துக்குரிய அந்த வார்த்தை.

gota sajith சிங்களத் தலைமைகளிடமிருந்து தமிழர்களால் துரும்பைக் கூட பெற்றுக்கொள்ள இயலாது - புகழேந்தி தங்கராஜ்ராணுவ முகாமொன்றை அடித்துத் தகர்த்த உற்சாகத்தில், முகாமின் மீது பறந்த பௌத்த சிங்களத் தேசியக் கொடியைப் போராளிகள் எரித்தனர் என்கிற தகவல் கேட்டு அதிர்ந்து போன பேராண்மை மிக்கப் பெருந்தலைவனாக பிரபாகரன் என்கிற அந்த மாசுமருவற்ற வீரன் இருந்தான். அந்தத் தளபதிகளை அழைத்து அந்தத் தலைவன் கண்டித்ததும், ‘நமக்கு எப்படி புலிக் கொடியோ, அதைப்போலவே அவர்களின் பெருமிதம் சிங்கத்தை உள்ளடக்கிய சிங்களக் கொடி… இப்படியெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்வது அறிவுடைமையல்ல…. வீரமுமல்ல’ என்று, தன் குழந்தைகளுக்குப் போதித்த தாய்ப்பனை அவன்.

பள்ளிப் பேருந்துக்கு கு ண்டுவைத்துவிட்டு, அந்தப் பழியையும் தன் மீது சுமத்த முயன்ற ஒரு இனவெறி அரசின் இழிவான நடவடிக்கை, அந்த மாமனிதனை எப்படியெல்லாம் பாதித்திருக்கும் என்பதை 15 ஆண்டுகள் கழித்து நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இதுபோன்ற சூழ்ச்சிகளிலும், வெறிபிடித்த இன அழிப்பு நடவடிக்கைகளிலும், பழம் தின்று கொட்டைபோட்ட நாடாக இலங்கை திகழ்வதை, பல பத்தா ண்டு நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. இக்கினியாகலை கரும்பாலையில், எரிந்துகொண்டிருந்த கரும்புச் சக்கைகளினூடே வீசியெறியப்பட்ட நூற்றுக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்களின் ரணமும் நிணமும் கலந்த வாடையை, எழுபதாண்டுகளுக்குப் பிறகும் உணர முடிகிறது நம்மால்!  கண்களை மூடிக் கொண்டு அந்த வாடையைச் சுவாசிக்கிற நொடியில், சிலிர்க்கிறது தேகம். எம் உறவுகளின் உடல்கள் எரிந்து கருகிச் சாம்பலான  அன்றிலிருந்து,  காற்றோடு காற்றாகக் கலந்தபடியே இருக்கிறது  எமது தொப்புள் கொடி உறவுகளின் விடுதலைக் கனவு.

கள்ளத்தனத்திலும் கபடத்திலும் நிபுணத்துவம் பெற்ற சிங்களத் தலைமைகளிடமிருந்து தமிழர்களால் ஒரு தும்பு துரும்பைக் கூட பெற்றுக்கொள்ள இயலாது என்பதுதான் நிதர்சனம். பிச்சை கேட்கும் நிலையில் தமிழினம் ஒருபோதும் நின்றதில்லை. இனியும் நிற்கக் கூடாது. சர்வதேசத்திடமிருந்து நீதி பெறுவதிலிருந்து ஓரங்குலம் கூட பின்வாங்காமல் நிற்பது மட்டுமே உயிர்களை இழந்த லட்சக்கணக்கான உறவுகளுக்கும், மனத்தளவில் சிதைக்கப்பட்ட பல்லாயிரம் சகோதரிகளுக்கும் செய்கிற உண்மையான மரியாதையாக இருக்கும்.

சஜித்தையோ ரணிலையோ மைத்திரிபாலாவையோ நம்பிச் சோரம்போவது, சொந்த மண்ணைக் காக்க நச்சுக் குப்பிகளுடன் திரிந்த நிஜமான வீரர்களுக்குச் செய்கிற பச்சைத் துரோகம். ‘எழுதுங்களேன், நான் எழுதாது செல்லும் என் பாடலை யாராவது எழுதுங்களேன்’ என்று ஆனையிறவு களத்தில் துப்பாக்கியோடும் கவிதைப் புல்லாங்குழலோடும் நின்று நமக்கான பாதையைத் தெளிவாகக் காட்டிய வானதி போன்ற சகோதரிகளின் கனவை மெய்யாக்குவதுதான் புத்திசாலித்தனம்.