சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை -அரசாங்கம்

சவுதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 156 பேரை இலங்கைக்கு விரைவில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் சவுதி அரேபியாவிலுள்ள ஒரு தடுப்பு முகாமில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்பு சபையினால் கருத்து வெளியிடப் பட்டதைத் தொடர்ந்து,

குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களை விடுதலை செய்வது தொடர்பாக சவுதி அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த பெண்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும்  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபிய விமானம் மூலம் தடுப்பிலுள்ள பெண்களை இலங்கைக்கு அனுப்ப சவுதி அரசு ஒப்புக் கொண்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply