சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் -நமல் ராஜபக்ச

சவுதி அரேபியாவில்  தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்கள் 41 பேர் குறித்த சிக்கல்களுக்குத் தீா்வுகான நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

மேலும் இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவுள்ளதாகவும் நமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கை பெண்கள் குறைந்தது 41 பேர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் அங்குள்ள நாடுகடத்தல் மையத்தில் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சா்வதேச மன்னிப்புச் சபை கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவா்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப் பணிப் பெண்களாக இலங்கையில் இருந்து வந்தவர்கள். இந்தப் பெண்கள் ரியாத்தில் உள்ள நாடுகடத்தல் தடுப்பு மையத்தில் எட்டு முதல் 18 மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் சா்சதேச மன்னிப்புச் சபை தெரிவித்தது.

இந்தப் பெண்களுடன் குறைந்தது மூன்று குழந்தைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பெண்ணுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பெண்களையும் உடனடியாக விடுவித்து, அவர்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து சவூதி அரேபிய அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என சா்வதேச மன்னிப்புச் சபையில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா பிராந்தியங்களுக்கான இணைப் பணிப்பாளர் லின் மலாஃப் கோரிக்கை விடுத்திருந்தார்

இந்நிலையில், குறித்த பெண்களை மீட்பது தொடர்பாக சவுதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் சவுதி அரேபியாவில்  தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்கள் 41 பேர் குறித்த சிக்கல்களுக்குத் தீா்வுகான நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு அமைச்சர் நமல் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.