Home செய்திகள் சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ-International Criminal Court) ரோகிங்யா தீர்ப்பு

சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ-International Criminal Court) ரோகிங்யா தீர்ப்பு

ரோகிங்யா இனவழிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மியன்மார் எடுக்க வேண்டும் என்று உலகின் உச்ச நீமன்றமான ஹேக்கில் உள்ள சர்வதே நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளனர்.

ஆபிரிக்காவின் சிறிய நாடான கம்பியா சர்வதேச நீதிமன்றத்தில் 2019இல் மியன்மாருக்கு எதிராக கொண்டுவந்த வழக்கின் தீர்ப்பின் முதலாவது கட்டமாக இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்புக்கு இணங்க மியன்மார் எடுக்கும் நடவடிக்கைகளை பற்றிய அறிக்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு நான்கு மாதங்களில் மியன்மார் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இத்தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தில் ரோகிங்யா இனவழிப்பு தீர்ப்பு பற்றிய விசாரணைகளை தொடரும். இதன் முடிவுகள் வர பல ஆண்டுகள் எடுக்கலாம். இதற்கான ஆதாரங்களை மியன்மார் பாதுகாக்க வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.645x399 1573928523146 சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ-International Criminal Court) ரோகிங்யா தீர்ப்பு

இனவழிப்பு ஒப்பந்தத்தில் (Genocide Convention) கையெழுத்திட்ட எந்த நாடும் இனவழிப்பு செய்யும் ஒரு நாட்டுக்கு எதிராக இப்படியானதொரு வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டு வரலாம். இந்தவழக்கில் ஈடுபட்ட Global Justice to Protect என்ற அமைப்பின் தலைவர் சைமன் அடம்ஸ் அல்ஜசீராவுக்கு கொடுத்த நேர்காணலில் இந்த வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் கொண்டு வருவதற்கு வேறு எந்த நாடும் முன்வராதபோது கம்பியா என்ற சிறிய ஆபிரிக்க நாடு முன்வந்தது என்று பராட்டினார்.

சமாானத்திற்கான நோபல் பரிசை பெற்ற ஆங் சங் சூசி அவருடைய நாடான மியன்மாரின் இராணுவத்திற்கு ஆதரவாக கொடுத்த வாக்குமூலங்களை சர்வதேச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் மியன்மாரால் முன்மொழியப்பட்ட நீதிபதியும் இத்தீர்ப்புக்கு ஆதரவாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏகமனமாக எடுக்கப்பட்ட இத்தீர்பை அழித்த 17 நீதிபதிகளில் சீனா மற்றும் ரசியா நாட்டை சேர்ந்த நீதிபதிகளும் இருந்தனர்.

இத்தீர்ப்பை அமுல்படுத்தும் அதிகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்கு இல்லையெனினும், அமுல் படுத்தும் அதிகாரமுள்ள ஐநா பாதுகாப்பு சபையில் இனியும் மியனமாருக்கு எதிரான தீர்ப்புக்களை பாதுகாப்புசபையில் உள்ள சீனா, ரசியா போன்ற நாடுகள் தடுக்க (veto) முடியாது என்ற கருத்தை பலரும் முன்வைக்கிறார்கள்.

இருப்பினும் இம்மாதிரியான ஒரு தீர்ப்பு சிறிலங்கா போன்ற மேற்குலக நட்பு நாடொன்றிக்கு எதிராக கொடுக்கப்படுமா என்ற சந்தேகம் பலருக்கு உண்டு என்பதையும் கவனிக்க வேண்டும்.

ரோகிங்யா மக்கள் தீவிர ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்காதததும், சுயநிர்ணய அரசியல் தீர்வு ஒன்றை இவர்கள் முன்வைக்காததும் சர்வதேச இத்தீர்ப்புக்கு ஏதுவாக இருந்தது என்று பலர் கருதுகிறார்கள்.

ஏறக்குறைய 2 மில்லயன் மக்கள் தொகையுள்ள ரோகிங்யா மக்களில் 1.2 மில்லியன் ரோகிங்யாக்கள் வங்காளத்தில் மோசமான அகதி முகாம்களிலேயே இன்றும் அல்லல்படுகிறார்கள்.

 

Exit mobile version