சர்வதேசகல்வித்தினம் ஒவ்வொரு ஆண் டும் ஜனவரி 24 ஆம் திகதி அன்று கொண்டாடப் படுகிறது. இது கல்வியை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கான வாய்ப்பு
க்களைக் கொண்டிருக்கின்றது. உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி யின் தரம் மாறுபட்டாலும், உலகளாவிய ரீதியில் பல மில்லியன் கணக்கான மக்கள் கல்வி தொடர்பான இந்த அடிப்படை மனித உரிமையை இழந்துள்ளனர்.ஓவ்வொரு நாட்டிலும் சிறந்த கல்விச் சீர்திருத்தங்களை உருவாக்கி இன,மத,மொழி,பிரதேச பேதமற்ற வகைகளில் அனைவருக்கும் சமமான கல்வி அணுகுமுறைகளை அடையக்கூடிய வகையிலும், அதனை மேம்படுத்துவதற்காகவும் விழிப்புணர்வை ஏற் படுத்துவதற்காகவுமே இந்த நாள் ஐக்கிய நாடுகள் அமையத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு சர்வதேச கல்வித் தினத்திற் கான கருப்பொருள் “AI மற்றும் கல்வி: தன்னியக்க உலகில் மனித நிறுவனத்தைப் பாதுகாத்தல்” என்பதாகும். அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான கல்வியின் பங்கைக் கொண்டாடும் வகையில்; இந்தநாள் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி, திங்கட்கிழமை, அன்று கொண்டாடப் படுகின்றது.
கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங் களுக்கு, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intellegene -AI) ஆகியவற்றுக்கு இடையிலான உறவை மேம்படுத்த இந்த கருப்பொருள் தேர்ந் தெடுக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு என்பது மனித நுண்ணறிவு தேவைப்படும் வகையில் பகுத்தறிவு, கற்றல் மற்றும் செயற்படக்கூடிய கணினிகள் மற்றும் இயந்திரங்களை உருவாக்குவதில் அக்கறை கொண்ட ஒரு அறிவியல் துறையாகும் அல்லது மனிதர்கள் பகுப்பாய்வு செய்யக் கூடிய அளவைவிட அதிகமான தரவை உள்ளடக்கியுள் ளது. இன்றைய நவீன தொழில் நுட்ப உலகில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்கை நுண் ணறிவு என்பது கணினி அறிவியல், தரவு பகுப் பாய்வு மற்றும் புள்ளிவிவரங்கள், வன் பொருள் மற்றும் மென்பொருள் பொறியியல், மொழியியல், நரம்பியல் தத்துவம் மற்றும் உளவியல் உள்ளிட்ட பல விடயங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த துறையாகும்.
வணிகப் பயன்பாட்டிற்கான செயற்பாட்டு மட்டத்தில், எவ்வாறு AI தொழில்நுட்பம் பயன் படுத்தப்படுகின்றதோ அந்த அளவுக்கு கல்வித் தொழில் நுட்பத்தில் பொருள் வகைப்படுத்தல், இயற்கை மொழி செயலாக்கம், பரிந்துரைகள், அறிவார்ந்த தரவு மீட்டெடுப்பு மற்றும் பல வற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான தரமான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் வாய்ப்புகளை ஏற்படுத்தி, பாலின சமத்துவத்தை அடைவதிலும், வறுமையின் சுழற்சியை மாற்றி அமைப்பதிலும் ஒவ்வொரு நாடும் கவனம் செலுத்துமாயின், அந்த நாடுகள் எல்லாத் துறைகளிலும் வெற்றிபெறும். ஆனால் கணினி மற்றும் AI மூலம் இயக்கப்படும் அமைப்புகள் அதிநவீனமயப்படுத்தப்படும் பொழுது, மனித நோக்கத்திற்கும் இயந்திரத்தால் இயக்கப்படும் செயலுக்கும் இடையிலான எல்லை கள் பெரும்பாலும் மந்தமடைகின்றன.
சர்வதேச கல்வித்தின வரலாறு2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் ஜனவரி 24 சர்வதேச கல்வித்தினமாக அறிவிக்கப்பட்டது, 2018 ஆம் ஆண்டில், டிசம்பர் 3, 2018 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, நிறைவேற்றிய தீர் மானத்தின் மூலம் ஜனவரி 24 சர்வதேச கல்வித்தி னமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல் சர்வதேச கல்வித்தினம் ஜனவரி 24, 2019 அன்று அனுசரிக்கப்பட்டது.
அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 24 சர்வதேச கல்வித்தினமாக கொண்டாடப் படுகிறது. 2025ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஆறாவது ஆண்டாகும்.
கல்வியைக் கொண்டாடவும், வளர்ச்சி மற்றும் அமைதிக்கான கற்றலின் முக்கியத்துவத் தைப் பற்றி சிந்திக்கவும். கல்வியை வழங்குவது கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, தரமான கல்வியை ஊக்குவிக்கும் கடமை நம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ளது.
யுனெஸ்கோவின் புள்ளிவிவர தரவுகளின் படி, 258 மில்லியன் குழந்தைகள் பாடசாலைக்குச் செல்வதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆபத்தான விளிம்புநிலையில் உள்ள சமூகங்கள், சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிக ளில் உள்ளவர்கள் மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளில் வாழும் மக்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் ஐ.நா. சுட்டிக் காட்டியுள்ளது. ஆனால்இன்று உலகம் முழுவதும் வாழும் எண்ணற்ற சமூகங்கள் தமக்குக் கல்வி என்பதே தேவையற்றது என்று நிராகரித்துள்ளன என்பதுதான் கவலைக்குரிய விடயமாக உள்ளது.
சர்வதேச கல்வித்தினம் கொண்டா டப்படும் பொழுது, தனிநபர்கள், சிவில் சமூகம் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரினால் முன் வைக்கப்படும் கல்வி மறு சீரமைப்புக்கள் குழந்தைகளுக்கு முதனிலைக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி முறையாக வழங்கப் படுவதை உறுதி செய்வதற்கும், கல்வியில் இளைஞர்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கல்வி அபிவிருத்திட்டங்கள் வெவ்வேறு இன மக்கள்தொகைகளின் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட வேண்டும், அதேவேளை ஒரு முக்கிய இலக்கை நோக்கி அனைத்துத் திட்டங்களும் ஒன்றிணைக் கப்பட வேண்டும். பாடசாலைக் கல்வி மற்றும் பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்து வெளி யேறும் மாணவர்களுக்கான உரிய வேலைவாய்ப்பு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்குத் தேவையான கல்வியை வழங்குவதற்கான மாற்றங்கள் பாடசா வைக் கல்வியிலும், பல்கலைக்கழகக் கல்வி முறையிலும் மாற்றத்தைக் கொண்டுவருவதன் மூலமே சர்வதேச கல்வித்தினத்தின் நோக்கம் வெற்றி அடையும்.
பலத்த எதிர்பார்ப்புக்களுடன் பரபரப்பாக ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி அனுர திசநாயக்காவின் அரசாங்கம் இன்று 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் மக்களின் எதிர்பார்க்கைகளை நிறைவேற்றமுடியாது திண் டாடி வருவதை இன்று பார்க்க முடிகின்றது.
கல்வி அமைச்சராகவும், பிரதம அமைச் சராகவும் நியமிக்கப்பட்ட கலாநிதி ஹருணி அமர சேகரா பதவிக்கு வந்ததும் நாட்டின் தற்போதைய பழைய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நவீன உலகிற்கு முகம் கொடுக்கக்கூடிய வகை யிலான கல்வி மறுசீரமைப்பைக் கொண்டுவரப் போவதாகவும்,கல்வித் துறையில் ஊழல்கள் மோசடிகளை ஒழித்துத் தரமான கல்வியைச் சகல இன மக்களுக்கும் வழங்கப்போவதாகவும் சூளுரைத்தார். ஆனால் பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்திய கல்வித் திட்டத் தில் சிறு சிறு மாற்றங்களை மட்டுமே ஏற்படுத்திப் பயனற்ற கல்வி முறையே இன்றும் நடைமுறையில் உள்ளது.
இன்றைய கல்வி முறையில் பின்வரும் குறை பாடுகள் காணப்படுகின்றன: சகல இன மக்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் கல்வி வழங்கப்படவில்லை நான்கு மதங்களைக் கொண்ட பல்லின சமுகங்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரு கின்ற இலங்கையில் மகாவம்சம் என்ற திரிபு படுத்தப்பட்டபௌத்த வராலற்றைச் சகல மக்களுக்கும் திணிக்கும் வகையில் பாடத் திட்டங்களின் சிங்கள பௌத்த நாகரிகங்கள் புகுத்தப்பட்டுள்ளன. இனங்களுக்கிடையில் நல்லுறைவையும் பரஸ்பர நம்பிக்கையையும் ஏற்படுத்த்த தவறிவிட்டது.
வரலாறு பாடத்தில் தமிழர்களின் வரலாறுகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டு இலங்கை பூர்வீகமாகவே பௌத்த சாடு என்று காட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கையில் பிரித்தானியரின் வருகைக்கு முன்னர் இருந்த மூன்று இராட்சியங்களில் யாழ்ப்பாண இராட்சியம் வலிமை மிக்க ஒரு அரசாக இருந்தது என்பது இருட்டிடிப்புச் செய்யப்்பட்டுள்ளது. சுpங்கள சைர்களைப் பற்றியும், சிங்கள இராஜதானிகளைப் பற்றியும், பௌத்த சின்னங்களைப் பற்றி யுமே அதிகளவில் பேசி தமிழ் பேசும் மாண வர்கள் மத்தியில் தமிழர்களின் வரலாறு முற்றாகவே மூடி மறைக்கப்பட்டு இலங்ரக ஒரு பௌத்த சிங்கள அரசு என்ற மாயையே ஏற்படுத்திவருகின்றது.
சித்திர பாடத்தில் பெரும்பாலான ஓவியங்களும் அவை தொடர்பான வரலாறுகளும் சிங்கள கலபசாரத்தையும்,புத்த விகாரைகளில் உள்ள சின்னங்களையுமே மக்கியப்படு;ததி எழுதப்பட்டுள்ளதால் நித்திர பாடத்தில பெரும்பாலான தமிழ் பேசும் மாணவர்கள் சித்தி அடையத் தவறிவிடுகின்றனர். இதனால் சித்திர பாடத்தை எடுக்கும் மாணவர்களின் தொகை தற்பொழுது குறைந்து வருகின்றது.
மாணவர்களிடையே போதைவஸ்து பாவனை, அமைதியின்மை, தற்கொலை செய்பவ்களின் எண்ணிக்கை அதிகரித்துவருதல், ஒழுக்கமின்மை போன்ற எதிர் மறையான விளைவுகள் ஏற்படு கின்றன. இவைபோன்ற பல குறைபாடுகளை உடைய கல்வித் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பல வருடங் களாகத் தமிழர்களினால் கோரிக்கைகள் முன் வைத்தபொழுது, அவை இன்று வரை ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் கவனத்தில் எடுக்கவில்லை என்பது தமிழர் தரப்புக்களைப் புண்படுத்தி வருகின்றது.
2022ஆம் ஆண்டு சர்வதேச கல்வித் தினத்திற்காக ஐக்கிய நாடுகள் சபையால் அறி விக்கப்பட்ட கருப்பொருள் “பாடத்திட்டத்தை மாற்றுதல், கல்வியை மாற்றுதல்” என்ற தொனிப்பொருளில் சர்வதேச கல்வித்தினம் கொண்டாடப்பட்ட பொழுதும் இலங்கையில் அது பெயரளவிலேயே வெறும் அறிக்கைகளைத் தயாரித்து ஐ.நாவுக்கு அனுப்புவதுடன் விழாக் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிவடைந்தன.அதில் குறிப்பிட்டபடி கல்விச் சீர்திருத்தத்தில் எவ்வித மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை. தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக் கைகள் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஆனால் அனுரா அரசாங்கம் தமிழ் மக்களினதும் நம்பிக்கையைப் பெறவேண்டு மானால் கல்வி மறு சீரமைப்புக்களை ஏற்படுத் தும் முன்னர் பின்வரும் விடயங்களைக் கவனிக்க வேண்டும்: தமிழர் தரப்பினரிடம் இருந்தும் கல்வி மறுசீரமைப்புத் தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்
கல்வி மறு சீரமைப்புக் குழுவில் தமிழ் புத்தி ஜீவிகளும் பாடசாலைகளில் கற்பிக்கும் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களும் இணைத்துக் கொள்ளவேண்டும்.பாடப் புத்தகங்னளிலும்,பாடத்திட்டங்களி லும் இனவாதக் கருத்துக்கள் மற்றும் இனங் களுக்கிடையில் முரணபாடுகளை ஏற்படுத்தும் கருத்துக்கள ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளவேண்டும்.வரலாறுகளில் திருபுகளை ஏற்படுத்தி சிங்களக் கலாசாரம் மற்றும் சிங்கள அரசுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து சிங்களக் கலாசாரத்தைத் திணிக்கும் முஙற்சியைக் கைவிட்டு சகல இனங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும்,அவற்றை அறிந்துகொள்ளும் வகையி லும் தமிழ் மக்களின் வீரம் செறிந்த வரலாறுகளும் சேர்க்கப்படவேண்டும்.
இனங்களுக்கிடையில் பாகுபாடு, வெறுப்பு, இனவெறி மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் ஆகியவற்றின் ஆபத்தான விடயங் களுக்கு இணையாக வன்முறைகளினால் ஏற் படக்கூடிய மோதல்களினால், உலகில் சமாதான முயற்சிகள் என்பன தூர விலகிச் செல்கின்றன. தமிழர் பரிதெசத்தில் காணப்படும் பொரு ளாதார முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தமிழ் ரிரதேநத்தில் உள்ள தொல்பொருட் சின்னங் களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பேணுதல் என்பனவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப் படவேண்டும்
அதேவேளை பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும் கல்விக்கும் வேலை உலகு எதிர்பார்க்கும் கல்வித் தகைமைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு நிலவுகின்றமை தொடர்பாகப் பலராலும் சுட்டிக்காட்டப்பட்ட பொழுது அவை இதுவரை கவனத்தில் கொள்ளப் படவில்லை. இந்த நிலையில் பல்கலைக் கழகக் கல்வியிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் புதிய நவீனத்துவம் வாய்ந்த பாடத் திட்டங்களையும் புதிய பாடநெறிகளையும் அறிமுகப்படுத்துவதுடன் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான உயர் மட்டப் பயிற்நி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சர்வதேச கல்வித்தினத்தைக் கொண்டாடு வதன்மூலம் பின்வரும் நிலைமைகள் ஏற்படு கின்றன.
கல்வி என்பது ஒரு மனித உரிமை. இந்த உரிமையை ஒருவரிடமிருந்து பறிப்பது என்பது மிகவும் கொடுமையானது.அதுவும் ஒரு குறித்த இனத்தை இலக்கு வைத்த கல்வி உரிமையைப் பறிப்பதோ அல்லது பாரபட்சமாக நடத்தப்படுவதோ ஏற்றுக் கொள்ளமுடியாது. கல்வி இல்லாமல், ஒரு சமுகத்தில் தொடர்ச் சியான வளர்ச்சி இருக்க முடியாது. சமூகங்கள் பரிணமிக்கவும் வளரவும் உதவுவதற்கு கல்வி அவசியம்.
நவீன தொழில் நுட்பத்தை கல்வி உலகிலும்,வேலை உலகிலும்,தனி நபர் வாழ்க்கையிலும் கடைப்பிடிப்ப முடிகழனடறது. ஒரு தனி மனிதனுக்குக் கல்வியை வழங்கு வதன் மூலம் அவர்களுக்கான நோக்கம், குறிக்கோள்களை ஏற்படுத்தவும் சிந்திப்பதற் கும், இலக்குகளைத் தீர்மானிக்கவும், கருத்துருவாக் கத்தை ஏற்படுத்து வதற்குமான உரிமையை வழங்குகின்றது.
‘நிலையான அமைதிக்கான கற்றல்’ மற்றும் ஒவ்வொரு தனி மனிதனுக்குமான சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குதலை நிறைவேற்றுவதை டீநாக்கமாககக் கொண்டுள்ளது. தன்னையும், பிறரையும், தான் வாழும் நாட்டையும் நேசித்தல் மற்றும் பல்வேறு விடயங்களையும் கற்றுக்கொள்வது’ என்ற வகையில் குழந்தைகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
“உலகை மாற்ற ஒவ்வொருவரும் பயன்படுத் தக்கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம்.” ஏன்று நெல்சன் மண்டேலா குறிப்பிட்டது போன்று தரமான கல்வியின் மூலம் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படத்தலாம் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.