கிழக்கில் தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவுத்தளம் என்பது அதிகரித்துவருவதை காணமுடிகின்றது.இலங்கையில் எந்த ஜனாதி பதியும் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் தமிழ் பொது வேட்பாளராவது எமது பிரச்சிiனைய பேசட்டும் என்ற வகையில் தமிழர்கள் பொதுவேட்பாளரின் பின்பாக அணி திரள்வதை காணமுடிகின்றது.
வடகிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி நிலைமையானது தெற்கில் வேட்பாளர் களுடையே ஒரு அச்ச நிலைமையினை ஏற்படுத்தியுள்ளதே உண்மையாகும்.அதன் காரணமா கவே தெற்கினை நோக்கிய வகையில் சிங்கள பெரும்பான்மை கட்சிகள் முகாமிட்டுள்ளதை காணமுடிகின்றது. தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் ஆரம்பத்தில் ஆர்வமற்றிருந்த தமிழர்கள் பின்னர் ஆர்வம்காட்டும் நிலைமையினை காணமுடிகின் றது.கிழக்கில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இன் னல்களுக்கான தீர்வு கிடைக்காவிட்டாலும் கிழக்கில் முன்னெடுக்கும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகளை இலங்கைக்குள்ளும் சர்வதேசத்திற்கும் கொண்டுசெல்லும் வாய்ப்பாக இந்த பொதுவேட்பாளரை பயன்படுத்தமுடியும் என தமிழ் மக்கள் கருதும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் ஏற்பட்ட குழப்ப நிலைமையானது தமிழ் மக்களை விழிப்படையச் செய்துள்ளது. சத்துருக்கொண்டான் படுகொலையென்பது கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரும் படுகொலையாக கருதப்படுகின்றது. 1990களிம் கிழக்கில் தமிழர்கள் இலக்குவைத்து பல படுகொலைகள் நடை பெற்றன. அவற்றில் சத்துருக்கொண்டான் படுகொலையென்பது மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.ஒரு இரவில் கூட்டங்களுக்கு அழைக்கப்பட்ட பொதுமக்கள் குடும்பம்குடும்பமாக படுகொலைசெய்யப்பட்ட துயரச்சம்பவம் நடைபெற்றது.இதில் சிறுவர்கள், கர்ப்பிணிகள், பெண்கள் என 186பேர் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நினைவுத்தூபியொன்று பனிச்சையடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.அதில் உயிர்நீர்த்தவர்களின் ஞாபகார்த்தமாகவும் இந்த படுகொலையின் பின்னணியில் இருந்தவர்கள் தொடர்பிலான விடயங்களும் அடங்கிய கல் வெட்டு பொறிக்கப்பட்டது.இதன்போது அங்குவந்த பொலிஸாரும் படையினரும் குறித்த கல்வெட்டை அகற்றி அங்கிருந்து பொது மக்களை இழுத்துச்செல்லும் அராஜகமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது பொலிஸாரும் படையினரும் மிக மோசமான முறையில்நடந்துகொண்டனர்.சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட பாலகிட்னர் ஆணைக்குழுவில் குறித்த சம்பவங்களுடன் படையினர்,ஊர்காவல் படையி னர் தொடர்புபட்டது குறித்து ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் உறுதிப் படுத்தப்பட்டது.இந்த படுகொலை தொடர்பில் பாலகிட்னர் அறிக்கையில் உறுதிப்படுத்தியிருந்த நிலையில் அதனை கல்வெட்டில் பதித்ததை சட்டத்திற்கு முரணானது என கூறி படையினரும் பொலிஸாரும் நடந்துகொண்ட முறையானது அப்பகுதி தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அருட் தந்தை ஜோசப்மேரி அவர்கள் தமிழ் மக்களின் படுகொலைகள் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளுக்கு எதிராக போராடவேண்டிய நிலை தமிழர்களுக்கு உள்ளது.இவ்வாறான நிலையில் நாங்கள் பொதுக்கட்டமைப்பினர் கொண்டுவந்துள்ள தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கவேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.சிங்கள தலைவர்கள் என்றைக்கும் தமிழர்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.அவர்களுக்கு தமிழர்கள் தொடர்பில் சிந்திப்பதற்கு தேவையில்லை.நாங்கள் தான் எங்கள் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லவேண்டும். அதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு இந்த தேர்தல்.நாங்கள் நிறுத்தியுள்ள தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலமே எமது பிரச்சினையை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் கொண்டுசெல்லமுடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்தார்.
உண்மையில் இவ்வாறான எண்ணப் பாடுகள் இன்று கிழக்கில் உள்ள அநேகமான தமிழர்களிடம் ஏற்பட்டுள்ளது.கடந்த காலத்தில் சிதறிப்போயிருந்த தமிழ் தேசிய ஆதரவாளர் களை ஒருங்கிணைக்கும் தளமாக இன்று பொது வேட்பாளர் எண்ணக்கரு மாற்றம்பெற்றுள்ளது.
இன்று தேர்தலைப்புறக்கணிக்கவேண்டும் என்று கூறும் தமிழ் தேசிய சக்திகளும் சிங்கள வேட்பாளரை தெரிவுசெய்யவேண்டும் என்று கூறும் தமிழ் தேசிய சக்திகளும் இன்று தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைக்கு கொண்டுவரும் வகையில் தமிழ் மக்களின் ஆதரவு இன்று பொதுவேட்பாளருக்கு அதிகரித்து வருகின்றது.
வெறுமனே வாக்குகளை மட்டும் நோக்காக கொண்டுசெயற்பட்டுவரும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இந்த தேர்தல் சிறந்த பாடத்தினை புகட்டுவது மட்டுமல்ல தமிழ் தேசிய கட்சிகளின் ஒன்றுபட்ட பலத்தினையும் வெளிப்படுத்துவதற்கான களமாகவும் பொது வேட்பாளர் காணப்படுகின்றார்.இவ்வாறான நிலையில் இந்த பொதுவேட்பாளரினை ஆதரிக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இன்று தமிழ் சமூகத்திற்கு உள்ளது.
இறுதி யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள் நம்பிக்கைகொண்ட தமிழ் தேசிய சக்திகள் தங்களுக்குள் மாறிமாறி முன்னெடுத்த வாக்கு வங்கிகளை தக்கவைப்பதற்கான அரசியல் காரணமாக தமிழ் தேசிய அரசியல் பாரிய பின்னடைவினை எதிர்கொண்டது.காலத்திற்கு காலம் தமது சுய அரசியலுக்காகவும் தமது சொந்த நலனுகளுக்காகவும் தமிழ் தேசியத்தினை அடகு வைத்த தமிழ் தேசிய அரசியல் பரப்பிலுள்ள அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு வயிற்றில் புளியைக்கரைக்கும் செயற்பாடுகளாக இன்று தமிழ் தேசிய அரசியல் மாற்றம்பெற்று நிற்கின்றது.
இன்று கிழக்கினைப்பொறுத்த வரையில் தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசியம் சார்ந்த வகையில் புரிதல்கள் அதிகரித்துவருகின்றன. வெளிப்படையாக தமிழ் தேசியத்தினை ஆதரிக்க தயங்கியவர்கள் இன்று வெளிப்படையாக ஆதரித்து நிற்கும் நிலைமையினை காண முடிகின்றது. பொதுவேட்பாளர் என்ற ஆயுதம் இந்த வெளிப்படுத்தல்களை கச்சிதமாக செய்துவருகின்றது.உள்ளக்குமுரலாகயிருந்தவர் கள் இன்று வெளிப்படையாக தமது ஆதங் கத்தினை வெளிப்படுத்தும் நிலைமையினை காணமுடிகின்றது.
இதற்கு ஆதாரமாக கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் தமது ஆதரவினை பொது வேட்பாளருக்கு அறிவித்ததுடன் தமது உள்ளத்திலிருந்து ஆதங்கத்தினையும் வெளிப்படுத் தியிருந்தது.
“இன்று எமது மக்கள் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களினால் எமது இனம் மிகவும் மோசமாக வஞ்சிக்கப்பட்டது தமிழர்கள் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார்கள் எமது இனம் கொன்றொழிக்கப்பட்டது இவை அனைத்தையும் இதுவரை காலமும் நாங்கள் அனுபவித்து வந்திருக்கின்றோம். எங்களது இனம் தேசியம் சுய நிர்ணயம் ஆகியவற்றை நாங்கள் பெற வேண்டுமாக இருந்தால் உங்களுக்காக அந்த வலுவான சக்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதனை சர்வதேசத்திற்கும் இலங்கையில் மாறி மாறி வருகின்ற பௌத்த அரசியல்வாதிகளுக்கும் எடுத்துக்காட்டுவதற்காகவும் இந்த தேர்தல் ஒரு முக்கியமான களமாக அமைந்திருக்கின்றது.
முதல் முறையாக வடகிழக்கில் இருக் கின்ற தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியத்தின் பால் உறுதிபூண்டு அனை வரும் ஒற்றுமையாக எமது ஜனாதிபதி தேர்தலிலே மற்றவர்களுக்கு நாங்கள் எடுத்துக்காட்டாக இந்த பொது வேட்பாளர் அவர்களை நாங்கள் ஆதரிக்க வேண்டும். அது மாத்திரம் இல்லாமல் இரு ஜனாதிபதி தேர்தலிலே பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக போட்டியிட வில்லை எமது மக்களுடைய ஒற்றுமை எங்களுடைய உரிமைக்காக நாங்கள் குரல் கொடுப் பதற்கு எல்லோரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக முதல் முறையாக ஒரு படிக்கல்லாகவே இதனை நாங்கள் கருதுகின்றோம்.”என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் பொதுவேட்பாளர் தொடர்பில் தெரிவித்திருந்தார்.
இவற்றினை நாங்கள் வெறுமனே வார்த்தைகளாகவும் ஒரு சந்தர்ப்பவாதமாகவும் கருத முடியாது.இதுவே இன்று கிழக்கு தமிழர்களின் உணர்வு இந்த உணர்வினை சரியான முறையில் வழநடாத்தவேண்டிய பொறுப்பு தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்புக்கு உள்ளது.இன்னமும் கிழக்கில் சரியான வகையில் தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு செயற்படாமை கவலைக்குரிய விடயமாகயிருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழ் தேசிய அரசியலை கட்டியெழுப்பமுன்வரவேண்டும் என் பதே எமது எதிர்பார்ப்பாகும்.