சத்தீஸ்கரில் மவோயிஸ்ட் குழுக்களால் கடத்தப்பட்ட பாதுகாப்புப்படை வீரர் விடுவிக்கப்பட்டார்

235 Views

சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவவோயிஸ்ட்டினர் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதுகாப்புப் படைவீரர்கள் 22 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்பு படைவீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தனர். இந்த நிலையில், நேற்று ஜம்முவை சேர்ந்த கோப்ரா படைப்பிரிவைச் சேர்ந்த இராகேஸ்வர் சிங் என்கிற பாதுகாப்பு படை வீரரின் புகைப்படத்தை மாவோயிஸ்ட் அமைப்பினர் வெளியிட்டிருந்தனர்.

மாவோயிஸ்டுகள்

மேலும் பாதுகாப்பு படைவீரர் உயிருடனும், பாதுகாப்புடனும் இருப்பதாகவும் கூறியுள்ள மாவோயிஸ்ட் அமைப்பினர், வீரரை விடுக்க ஒப்புக்கொண்டு, இதுகுறித்து அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்தன.

இச்சூழலில் தற்போது பணயக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப்படை வீரரை ஏறத்தாழ 100 மணி நேரத்திற்கு பின்னர் மாவோயிஸ்ட் அமைப்பினர் விடுவித்துள்ளனர்.  ராகேஸ்வர் சிங் குடும்பத்தினரின் வேண்டுகோளினை ஏற்று அவரை மாவவோயிஸ்ட்டினர் விடுவித்துள்ளனர்.

இந்த தகவலை சத்தீஸ்கர் மாநில அரசு உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply