Tamil News
Home செய்திகள் சட்ட விரோத மீன்பிடி முறைகள் நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்

சட்ட விரோத மீன்பிடி முறைகள் நிறுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்

வடக்கில் சட்ட விரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் வட மாகாணத்தை முடக்கி மாபெரும் போராட்டம் நடாத்தப்படும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்ன ராசா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இன்று (திங்கள்கிழமை) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் முல்லைத்தீவில் இடம் பெற்ற மீனவர்களின் போராட்டமானது ஒரு நியாயமான போராட்டம் குறித்த போராட்ட தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து வந்த குழு ஒன்று அவர்களது கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து அமைச்சு மட்டத்தில் எதிர்வரும் 12-ம் தேதி தீர்வு வழங்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்

இதேவேளை அவ்வாறு இடம் பெறாத பட்சத்தில் வடக்கு மாகாணம் முழுவதிலும் மீனவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

Exit mobile version