கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதாக அறிவித்த இலங்கை, அதிலிருந்து பின்வாங்கியமை ஏமாற்றமளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Disappointed to see that the Government and PM are backing away from ending discriminatory cremation policy. People, including loved ones recently passed, deserve more respect for their rights from a democratic government.
— Ambassador Teplitz (@USAmbSLM) February 18, 2021
இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் கொள்கையை முடிவிற்கு கொண்டுவருவதிலிருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.
மேலும் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் உட்பட பொதுமக்களுக்கு ஜனநாயக அரசாங்கத்திடமிருந்து அவர்களின் உரிமைகளுக்கான மேலும் கௌரவம் வழங்கப்படவேண்டும் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.