சஜித் தலைமையில் சகல எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்தில் கலந்துரையாடல்

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடினர்.