கோவிட்-19: மருத்துவப் பணிக்கு திரும்பும் ‘மிஸ் இங்கிலாந்து’

259 Views

தற்போது மிஸ் இங்கிலாந்தாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர், பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாக பரவும் இந்த நேரத்தில், மருத்துவ பணியை தொடர விரும்புவதாக கூறியுள்ளார்.

இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்த இருந்த சுவாச நிபுணரான பாஷா முகர்ஜி, தற்போது பிரிட்டன் திரும்பியுள்ளார். அந்நாட்டு சுகாதார சேவையில் இவர் பணியாற்ற இருக்கிறார்.

24 வயதான பாஷா முகர்ஜி, லின்கன்ஷைரில் உள்ள பாஸ்டன் பில்க்ரிம் மருத்துவமனையில் அடுத்த வாரம் தன் பணியைத் தொடங்க உள்ளார்.

தொண்டூழிய பிரசார நோக்கங்களுக்காக ஆசியா முழுவதும் பயணம் செய்துவந்த அவர், இந்தியாவுக்கும் வந்திருந்தார். அடுத்து பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாகியது தெரிய வந்தது. அங்கு மருத்துவ பணியாளர்களின் சுமையை பகிர்ந்த கொள்வதற்காக அவர் பிரட்டன் சென்றார்.

பிரிட்டனில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணிக்கு வருமாறு அந்நாட்டு தேசிய சுகாதார சேவை கேட்டுக்கொண்டுள்ளது.

இளநிலை மருத்துவரான தனக்கு இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க கூடுதல் பயிற்சி மற்றும் கூடுதல் பொறுப்பும் வழங்கப்படும் என்பது பாஷா முகர்ஜிக்கு நன்கு தெரியும்.

கோவிட்-19 நோயாளிகள் இருக்கும் அறைகளுக்கு செல்வதில் உள்ள ஆபத்தும் அவர் அறிந்த ஒன்றே.

ஆனால் அதைப் பற்றி தான் கவலை கொள்ளவில்லை என்று பாஷா கூறுகிறார்.

நன்றி-பிபிசி

Leave a Reply