கோவிட் 19 – சமூகத்தொற்றாக மாறும் அபாயத்தில் இலங்கை!

கொரோனா தொற்று, சமூகத்தொற்றாக மாறும் அபாயத்தில் இலங்கை இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேலும் ஒரு வயதான நோயாளி அல்லது ஒரு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகினால் அவரின் நிலைமை தீவிரமாக இருக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாட்டில் ஒரு கடுமையான நிலைமை உருவாகியுள்ளது என்றும் எனவே சமூக தொற்று ஏற்படும் விளிம்பில் இலங்கை இருப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தொற்று நோய் பிரிவின் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர, நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அளவு முன்னரைவிட அதிகளவில் இருப்பதாகவும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாது விட்டால் உயிரிழப்புக்களைத் தவிர்க்க முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.