கோத்தபயாவுடன் பேரம் பேசும் புளொட் பிரமுகர் – தேர்தலைப் புறக்கணிக்க தமிழ் மக்கள் முடிவு?

701 Views

தமக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் பகிரங்கமாக கேட்கட்டும். தருவதற்கு எம்மிடம் என்ன இருக்கின்றது என்பதை கொள்கை அறிக்கையாக வெளியிடலாம்.

அதன் பின்னர் என்ன செய்யலாம் என்பதை நாம் கூடிக் கதைக்கலாம் என மகிந்த தெரிவித்ததாக கோத்தபயாவுடன் பேரம் பேசியுள்ள புளொட் பிரமுகர் ஒருவர் தொரிவித்துள்ளார்.

இன்று காலை உணவு விருந்திற்கு தான் அழைத்திருந்த தமிழ் ஊடக ஆசிரியர்களுள் ஒருவர் “தமிழ் கூட்டமைப்பிற்கு அல்லது தமிழர் தரப்பிற்கு முதலில் ஏதும் வாக்குறுதி வழங்குவீர்களா?” என்று கேட்டதற்கு மகிந்த இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அதேவேளை கடந்த வாரம் தன்னை சந்தித்து பேசிய சுமந்திரன் வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக சஜித்திற்கு எந்த அறிவும் கிடையாது என்று தன்னிடம் சொன்னதாகவும் புளொட் பிரமுகர் தெரிவித்தார்.

சித்தார்த்தன் சகிதம் கோத்தபயாவை சந்தித்த குறித்த பிரமுகர் பின்னர் அதனை மறுத்திருந்தார்.

சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருவதுடன் தமிழ்மக்களை பழிவாங்கவும் சத்தமின்றி மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு மூலம் இன அழிப்பை மேற்கொள்ளவும் பௌத்த துறவிகளையும், சிங்களப் படையினரையும், முஸ்லீம் சமூகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முழுக்க முழுக்க சிங்கள தேசத்திற்கு நன்மை தரும் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பது அல்லது தமது வாக்குகளை தமிழர் ஒருவருக்கு அளிப்பதன் மூலம் புறக்கணிப்பை மேற்கொள்வது என்ற திட்டத்தில் தமிழ் மக்கள் உள்ளபோது சிங்கள இராணுவத்துடன் பணியாற்றிய ஒட்டுக்குழுக்கள் தமது பதவிகளுக்காக பேரம் பேசுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply