Tamil News
Home செய்திகள்  கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பில் அமைச்சரவை விசேட அனுமதி

 கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பில் அமைச்சரவை விசேட அனுமதி

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனம் ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுக அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து அரச மற்றும் தனியார் வர்த்தகமாக முன்னெடுக்க அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

35 வருடங்களில் அபிருத்தி செய்தி நடைமுறைப்படுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான ஒப்பந்தங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடமிருந்து முதலீட்டாளர்களை பரிந்துரைக்குமாறு கூறியிருந்த நிலையில், இந்தியாவிடமிருந்து மாத்திரம் முதலீட்டாளருக்கான உடன்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version