Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இது வரையில் 23.48 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இது வரையில் 23.48 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 23.48 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவியுள்ளது.  வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்துள்ளபோதும் அதன் பாதிப்பு குறையாமல் புதிய வகை கொரோனா வைரசுகள் சில நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளன.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தொடர்ந்து  முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 107,425,993 ஆக உயர்வடைந்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 2.56 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version