Tamil News
Home செய்திகள் கொரோனா வைரஸ் – இலங்கையில் நேற்றைய தினம் ஒருவர் மரணம்; 517 பேருக்கு தொற்றியது

கொரோனா வைரஸ் – இலங்கையில் நேற்றைய தினம் ஒருவர் மரணம்; 517 பேருக்கு தொற்றியது

இலங்கையில் நேற்றைய தினம் 517 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள அதேவேளையில், ஒருவர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 130ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருவர் கொரோனாவால் மரணமடைந்துள்ளார். இவர் பிலியந்தலையை சேர்ந்த 72 வயதான ஆண் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், நேற்று மாத்திரம் 517 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளிகளின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version