கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் – இலங்கை சுகாதார அமைச்சு

230 Views

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பானது நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தமல்ல எனத் தெரிவித்துள்ள இலங்கை சுகாதார அமைச்சு, தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

கொரோனா நோயாளிகள்  நாடளாவிய ரீதியில் பதிவாகி வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் நேற்று தெரிவித்துள்ளார்.

முடக்கல் விதிமுறைகளைத் தளர்த்தியதைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது என்றும்  எனினும் நிலைமை கட்டுப்பாட்டை இழக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில்,பொதுமக்கள் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply