கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார் பிரேசிலின் அதிபர் ஜெய்ர் போல்சானாரோ.
பிரேசிலில் இம்மாதத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரேஸில் சுகாதாரத் துறை அதிகாரிகள், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,04,220 ஆக அதிகரித்துள்ளது. அதன் பலி எண்ணிக்கை 1,71,460 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவிற்கு அடுத்து பிரேஸில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக, கொரோனாவைப் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் இருந்தது, கொரோனா தாக்கத்தின் தீவிரத்தை உணராமல் அதைக் குறைத்து மதிப்பிட்டது, ஊரடங்கு நடவடிக்கைகள் ஊக்கப்படுத்தாமல் இருந்தது என பல குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் பிரதமர் போல்சானாரோ எதிர்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில், முகக்கவசம் அணிவது, கொரோனா நோய்த்தொற்று பரவலைப் பெருமளவு கட்டுப்படுத்தாது என்றும் “ நான் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ள மாட்டேன், இது என் உரிமை.” எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள அஸ்ட்ராஜெனெகா எனும் தடுப்பு மருந்தை 10 கோடி பேருக்கு வாங்க பிரேசிலின் சுகாதார அமைச்சகம் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.