கொரோனா காலத்தில் ஆதிவாசிகள் வாழ்வாதாரத்தில் பாதிப்பு

மஹியங்கனை பகுதியில் வசிக்கும் ஆதிவாசிகள் அடிப்படை உணவு வசதிகளின்றி  சிரமத்தினை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஆதிவாசிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ஆதிவாசிகளிடம் வினவிய போதே அவர்கள் இவ்வாறு  தெரிவித்துள்ளார்கள்.

IMG 20210529 WA0018 கொரோனா காலத்தில் ஆதிவாசிகள் வாழ்வாதாரத்தில் பாதிப்பு

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

மஹியங்கனை பகுதியில் 400 குடும்பங்களை சேர்ந்த 2500 ஆதிவாசி  அங்கத்தவர்ள்  வாழ்ந்து வருகின்றோம். நாட்டில் தற்போது ஏற்பட்ட கொரோனா வைரஸ்  தொற்று   நோயின் தாக்கம் எமக்கு இல்லை.   ஆனால் ஆதிவாசிகள் வாழும் குறித்த பகுதிக்கு, கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக  சுற்றுலா பயணிகள்  அவ்  இடங்களுக்கு வருவதில்லை.

IMG 20210529 WA0019 கொரோனா காலத்தில் ஆதிவாசிகள் வாழ்வாதாரத்தில் பாதிப்பு

சுற்றுலா பயணிகள் வருவதனால் எமக்கு அதிக  உதவிகள் கிடைத்தது. அதனை வைத்தே தாம் அன்றாட வாழ்வை மேம்படுத்தினோம்.

IMG 20210529 WA0016 கொரோனா காலத்தில் ஆதிவாசிகள் வாழ்வாதாரத்தில் பாதிப்பு

தற்போது சுற்றுலா பயணிகள் வராத காரணத்தினால் எமக்கு உதவிகள் ஒன்றும் கிடைக்கவில்லை.   இதனால்  தற்போது வாழ்வாதாரத்தில் பெரும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றோம்.

IMG 20210529 WA0013 கொரோனா காலத்தில் ஆதிவாசிகள் வாழ்வாதாரத்தில் பாதிப்பு

எனவே எம் வாழ்வை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.