கொரோனா எச்சரிக்கை- ஊரடங்கு குறித்து புதிய அறிவிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்பாக புதிய அறிவிப்பு குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  நாலக  கலுவெவ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள   அறிக்கையில்,

“2020 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி காலை 5.00 மணி வரையில் நடைமுறைப்படுத்தும் வகையில் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 2020.11.02 திங்கட்கிழமை நீக்கப்படமாட்டாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைவாக  COVID – 19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, தற்பொழுது மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் 2020 நவம்பர் மாதம் 02 திகதி காலை 5.00 மணி தொடக்கம் 2020 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5.00 மணி வரையில் மேலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.

மேல் மாகாணத்திற்கு மேலதிகமாக, இரத்தினபுரி மாவட்டத்தில், எஹலியகொடை பொலிஸ் பிரிவிலும், குருநாகல் மாநகரசபை எல்லைப் பகுதியிலும், குளியாப்பிட்டி பொலிஸ் எல்லை பகுதியிலும் இவ்வாறே 2020 நவம்பர் மாதம் 02 ஆம் திகதி காலை 5.00 மணி தொடக்கம் 2020 நவம்பர் 09 ஆம் திகதி காலை 5.00 மணி வரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று COVID  19 வைரஸ் தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.