கொரோனா அதிகரிப்பு -முற்றாக முடங்கியது மட்டக்களப்பு

367 Views

கொரோனா தொற்றினை தடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்ட பயணத்தடை காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளும் முடங்கியுள்ளன.

பயணத்தடை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் இன்று காலை முதல் முழுமையாக முடங்கியுள்ளது.

IMG 0103 கொரோனா அதிகரிப்பு -முற்றாக முடங்கியது மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மருந்து விற்பனை நிலையங்களை தவிர அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் அரச தனியார் போக்குவரத்துகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

IMG 0108 e1621671477943 கொரோனா அதிகரிப்பு -முற்றாக முடங்கியது மட்டக்களப்பு

அத்தியாவசிய தேவைகருதிய செயற்பாடுகள் மட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறுதுடன் ஏனைய அனைத்து சேவைகளும் முடங்கிய நிலையில் உள்ளன.

கொரோனா தொற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்த நிலையில் உள்ளதன் காரணமாக  இங்கு இறுக்கமான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

IMG 0101 1 கொரோனா அதிகரிப்பு -முற்றாக முடங்கியது மட்டக்களப்பு

இந்நிலையில், காவல்துறையினரும் படையினரும் இணைந்து வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன் பயணத்தடையினை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply