கொரோனாவுக்கான தடுப்பு மருந்து 90 வீதம் பலளனிக்கக்கூடியது – ஆய்வுகளிலிருந்து தகவல்

250 Views

கொரோனா வைரசிற்கான முதலாவது தடுப்பு மருந்து 90 வீதம் பயனளிக்ககூடியது என்பது ஆரம்ப கட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது என பிசிசி தெரிவித்துள்ளது.

முதலாவது தடுப்பு மருந்தினை உருவாக்கியபிபைசர் பையோன் டெக் நிறுவனம் இதனை விஞ்ஞானம் மற்றும் மனிதாபிமானத்திற்கான பெரும் வெற்றி என தெரிவித்துள்ளது.

ஆறு நாடுகளை சேர்ந்த 435000 பேரிடம் இந்த மருந்தினை பரிசோதனை செய்தததில் அது வெற்றியளித்தது என தெரிவித்துள்ள நிறுவனம் இந்த மருந்து குறித்து எந்த கரிசனை வெளியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்த மருந்தினை அவசரமாக பயன்படுத்துவதற்காக இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிப்பதற்காக திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்த மருந்தும் சிறந்த சிகிச்சை முறைகளுமே தற்போதைக்கு ஒரேயொரு வாய்ப்பாக காணப்படுவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான பல மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுவதுடன் அவை மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளன. எனினும் இந்த மருந்தே தற்போதைக்கு முழுமையான முடிவுகளை காண்பித்துள்ளது.

Leave a Reply