கொரோனாவால் மரணிப்போரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி – வர்த்தமானி வெளியீடு

197 Views

 

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

உடல்களை அடககம் செய்வதென்றால் சுகாதார பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மயானம் அல்லது அதிகாரங்கள் அனுமதியளித்த உரிய இடத்தில் அந்த அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு சர்வதேச ரீதியாக எதிர்ப்புக்கள் உருவாகியிருந்தது. ஜெனீவாவிலும் இந்தப் பிரச்சினை எதிரொலித்திருந்தது.

இந்தப் பின்னணியில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயே அவசரமாக இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply