உலகில் கொரோனா பரவல் காரணமாக 93%மான நாடுகளில் மனநலம் சார்ந்த சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நிலவும் கொரோனா பாதிப்பு காரணமாக 130 நாடுகளில் மனநலம் சார்ந்த சிகிச்சைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. மேலும் இது தொடர்பான நிதியுதவிகளும் பாதிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெறவுள்ள மனநலம் தொடர்பான நிகழ்வில் பிரபலங்கள், உலகத் தலைவர்களை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டில் உலக சுகாதார அமைப்பு ஈடுபட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளன. எனவே பொருளாதாரத்தை மீட்கும் நோக்கில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
3 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.