Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த அதிபர் கிம் உத்தரவு

கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த அதிபர் கிம் உத்தரவு

உலக நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்குமாறு வடகொரிய அதிபர் கிம் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும்  கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இருந்தும் வடகொரியாவில் கொரோனா தொற்று குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு இருந்தாலும் தடுப்பு மருந்துகள் பல்வேறு சோதனைக் கட்டங்களில்தான் இருக்கின்றன.

இந்நிலையில், இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில், “உலகம் முழுவதும்  கொரோனா தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் கொரோனா வைரஸைத் தடுக்கும் பணிகளில் தீவிரமாக இறங்க வேண்டும் என்று கிம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version