Tamil News
Home செய்திகள் கொரோனாக்கு மத்தியில் இலங்கையில்  அதிகரிக்கும் காற்று மாசு!

கொரோனாக்கு மத்தியில் இலங்கையில்  அதிகரிக்கும் காற்று மாசு!

கடந்த சில நாட்களாக இலங்கையில் காற்று மாசு அதிகரித்துக் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் வளி மதிப்பீட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின்  கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட  பகுதிகளைத் தவிர்த்து ஏனைய அனைத்து பகுதிகளிலும் காற்று மாசடைதல் அதிகரித்துள்ளது என்றும் அந் நிலையம் தெரிவித்துள்ளது.

மிகவும் சிறிய தூசியாக கருதப்படும் பி.எம் 2.5 தூசி, 100 – 150 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், அது செயற்திறன் குறைந்த நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும்  எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதனால் நாட்டில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வாகனப் போக்குவரத்து குறைந்துள்ள நிலையில், தற்போது காற்று மாசடையும் விதம் குறிப்பிடத்தக்களவு குறைந்திருக்க வேண்டும். ஆனாலும் காற்று மாசடைதல் அதிகரித்தே காணப்படுகின்றது என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின்  வளி மதிப்பீட்டு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசடைவு காரணமாகவும், இலங்கையில் வளிமண்டல எல்லைப் பகுதியில் காற்று மாசடைந்துள்ளதாக அறிய முடிகின்றது எனவும் அந்நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

Exit mobile version