Home செய்திகள் கைதிகளைப் பாதுகாக்க முடியாவிட்டால் அரசு எதற்கு? சிறை முன் கதறியழும் மக்கள்

கைதிகளைப் பாதுகாக்க முடியாவிட்டால் அரசு எதற்கு? சிறை முன் கதறியழும் மக்கள்

மஹர சிறைச்சாலை கைதிகளின் குடும்பத்தவர்களின் சிறைச்சாலைக்கு முன்னாள் திரண்டு கதறியழுவதையும், வேதனையில் துடித்ததையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களின் பேசுபொருளாக மாறியுள்ளன.

மஹர சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்கள் தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் சிறைச்சாலை முன்னாள் நின்று கதறி அழுவதையும் மன்றாடுவதையும் காண்பிக்கும் பல படங்கள் வெளியாகியுள்ளன.

மஹர சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருவரின் குடும்பத்தை சேர்ந்த பெண்ணொருவர் பொலிஸ்உத்தியோகத்தரின் காலில் விழுந்து மன்றாடுவதை காண்பிக்கும் மனதை உருக்கும் படமொன்று குறித்து பதிவிட்டுள்ளனர்.

வடக்குகிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் கதறல்களையும் மஹர சிறைச்சாலையின் முன்னாள் சிறைக்கைதிகளின் உறவினர்களின் கதறல்களையும் ஒப்பிட்டும் கருத்துக்கள் பதிவாகியுள்ளன.

பொலிஸ் உத்தியோகத்தரின் காலில் பெண்ணொருவர் விழுந்து கதறும் படம் எனது இதயத்தை பிளக்கின்றது என பதிவிட்டுள்ள பத்திரிகையாளர் ரசிக்கா ஜயக்கொடி சிறைச்சாலையில் உள்ளவர்களை பாதுகாக்க முடியாவிட்டால் அரசாங்கங்கள் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.

997 கைதிகளைப் பாதுகாக்க முடியாவிட்டால் அரசு எதற்கு? சிறை முன் கதறியழும் மக்கள்நாங்கள் தோல்வியடைந்த நாடாக மாறிவிட்டோம், பொலிஸ் அதிகாரியொருவரின் காலில் விழுந்து இந்த தாய் கதறியழும் படம் சிறைச்சாலை கலவரம் குறித்து அனைத்தையும் தெரிவிக்கின்றது என ரசிக்கா ஜெயக்கொடி பதிவிட்டுள்ளார்.

கண்ணீர் தொடர்ந்து வெளிப்படுகின்றது,கண்கள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன,அழுகுரல்கள் பெரிதாகின்றன காதுகள் மூடப்பட்டுள்ளன என பதிவிட்டுள்ள ஒருவர் வடக்குகிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் படங்களையும் மஹரசிறை முன்னாள் கைதிகளின் தாய்மார்கள் கதறியழும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடம் கடக்கும் போதும் புதிதாக கண்ணீர் விட்டு அழும் தாய்மார்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றனர் என தர்சா பஸ்டியன் பதிவிட்டுள்ளார்

அவர்களின் பாசத்திற்குரியவர்கள் சிறைக்கைதிகளாகயிருக்காலம் ஆனால் மரணிக்க்கவேண்டிய அளவிற்கு என்ன குற்றமிழைத்தார்கள் என பிரசாத் வெலிகும்புர என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்

வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிகளை பயன்படுத்துமாறு யார் உத்தரவிட்டது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மையினத்தவர்களை போல சிங்கள சிறைக்கைதிகள் சிங்கள பாட்டாளி வர்க்கத்தினர் மாற்றுக்கருத்துடைய சிங்களவர்கள் சமஸ்டி முறைக்கு ஆதரவான சிங்களவர்கள் அனைவரினது உயிர்களும் அரசாங்கத்தினை பொறுத்தவரை அவசியமில்லாதது எனவும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று பலர் மஹரசிறையின் முன்னாள் கைதிகளின் உறவுகள் கதறும்காட்சிகள் தங்களை மிகவும் வேதனைப்படுத்திவிட்டன என பதிவிட்டுள்ளனர்.

Exit mobile version