Home செய்திகள் கூட்டமைப்பு – மைத்திரி சந்திப்பு ; எந்த கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காத சிறிலங்கா சனாதிபதி

கூட்டமைப்பு – மைத்திரி சந்திப்பு ; எந்த கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்காத சிறிலங்கா சனாதிபதி

249 Views

இரா­ணுவம் வச­முள்ள காணி­களை விடு­விப்­பது குறித்து இரா­ணு­வமே இறுதி தீர்­மானம் எடுக்க வேண்டும் எனவும் பாது­காப்பு படைகள் வச­முள்ள காணிகள் எவை என் ­பது குறித்து கூட்­ட­மைப்­பினர் எழுத்­து­மூல அறிக்­கையை தர வேண்டும் என்றும்  தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ருடன் நேற்று இடம்­பெற்ற சந்­திப்­பின்­போது  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூட்டமைப்பு தெரி­வித்­துள்­ள­துடன் இடை நடுவே பேச்­சு­வார்த்­தையை விட்டும் வெளி­யே­றி­யி­ருக்­கிறார்.

இதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன   தலை­மையில் அரச அதி­கா­ரிகள் பாது­காப்பு தள­ப­திகள் மற்றும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் பங்­கேற்ற  இந்த  சந்­திப்பு எந்­த­வித ஆரோக்­கி­ய­மான முன்­ன­கர்­வு­களும் இல்­லாது முடி­வுக்கு வந்­த­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  பொறுப்­ பு­ணர்­வுடன் பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொள்­ள­வில்லை என சந்­திப்பில் கலந்­து­கொண்ட கூட்­ட­மைப்­பினர் தெரி­வித்­தனர்.

வடக்கில்  இரா­ணுவம் வச­முள்ள காணி­களை விடு­வித்தல் மற்றும் மகா­வலி அதி­கா­ர­சபை, வனப்­பா­து­காப்பு திணைக்­களம், தொல்­பொ­ரு­ளியல் திணைக்­க­ளங்­களின் மூல­மாக வடக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நில ஆக்­கி­ர­மிப்பு விட­யங்கள் குறித்து  ஆராயும் நோக்கில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழு நேற்று காலை ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர்.  இதில்  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு சார்பில் மாவை சேனா­தி­ராஜா, ஸ்ரீதரன், சார்ல்ஸ் நிர்­ம­ல­நாதன், சர­வ­ண­பவன், சிவ­சக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராச ஆகியோர் மாத்­தி­ரமே கலந்­து­கொண்­டனர்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் முற்­பகல் 11 மணி­ய­ளவில்  இந்த சந்­திப்பு இடம்­பெற்ற நிலயைில் கூட்டம் ஆர­மிக்­கப்­பட்டு சில நிமி­டங்­களில் வேறு அலுவல் ஒன்­றுக்­காக ஜனா­தி­பதி கூட்­டத்தை விட்டு வெளி­யே­றி­ய­துடன் பாது­காப்பு அதி­க­ரிகள் அரச அதி­கா­ரிகள் மட்­டுமே கூட்­டத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்­தனர்.

நீண்ட நேர­மாக அரச அதி­கா­ரி­க­ளிடம் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­திய கூட்­ட­மைப்­பினர் அதி­ருப்­தி­யுடன் இருந்­த­துடன் சில வாக்­கு­வா­தங்­க­ளையும் நடத்­தி­யுள்­ளனர். குறிப்­பாக கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.ஸ்ரீதரன் இந்த கூட்­டத்தில் ஆக்­க­பூர்­வ­மான நோக்­கங்கள் ஒன்றும் இல்லை எனவும், ஜனா­தி­பதி பொறுப்­பில்­லாது நடந்­து­கொள்­வ­தாக கூறி இடை நடுவே கூட்­டத்தை விட்டு வெளி­யே­றி­யி­ருந்தார். நீண்ட நேரத்தின் பின்னர் மீண்டும் கூட்­டத்­திற்கு வந்த ஜனா­தி­பதி சிறிது நேரம் கலந்­து­ரை­யா­டிய நிலையில் நீண்ட நேர­மாக பேசி­விட்டோம் கூட்­டத்தை முடித்­துக்­கொள்­ளலாம் என கூறி வெளி­யே­றி­யுள்ளார்.

எவ்­வாறு இருப்­பினும் இந்த சந்­திப்பில் கூட்­ட­மைப்­பினர் தமக்கு ஜனா­தி­ப­தி­யுடன் சந்­திக்­கக்­கி­டைத்த நேரத்தில் முக்­கி­ய­மான கார­ணி­களை எடுத்­துக்­கூ­றி­யுள்­ளனர். இதன்­போது வடக்கில் பாது­காப்பு படைகள் வசம் தொடர்ந்தும் தக்­க­வைத்­துள்ள காணிகள் குறித்து தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­திக்கு தெளி­வு­ப­டுத்­தினர்.

வடக்கில் ஐந்து மாவட்­டங்­க­ளிலும் பாது­காப்பு படை­யினர் பொது­மக்­களின் காணி­களை வசப்­ப­டுத்­தி­யுள்­ளனர். குறிப்­பாக கேப்­பா­பி­லவு பகு­தியில் இப்­போதும் பொது­மக்­களின் 72 ஏக்கர் காணிகள் பாது­காப்­பு­ப­டைகள் வசம் உள்­ளன. மன்னார் மாவட்­டத்தில் அதி­க­ள­வி­லான காணிகள் இரா­ணுவம் தன்­வ­சப்­ப­டுத்­தி­வைத்­துள்­ளது. பொது­மக்கள் காணிகள் என கடந்த 2008ஆம்  ஆண்டில் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­க­வினால் வர்த்­த­மா­னி­ப­டுத்­தப்­பட்ட காணிகள் கூட இன்­னமும் விடு­விக்­கப்­ப­டாது உள்­ளன. இவை குறித்து எந்­த­வொரு முன்­னர்­வு­களும் இன்­னமும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தையும். மகா­வலி அபி­வி­ருத்தி சபை மற்றும் வனப்­பா­து­காப்பு திணைக்­களம் என்­பன தொடர்ந்தும் காணி­களை அப­க­ரித்து வரு­கின்­றது என்­ப­தையும்  மன்னார் மாவட்ட எம்.பி சார்ல்ஸ் நிர்­ம­ல­நாதன் எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தார்.

அதே­போன்று   கிளி­நொச்சி முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளிலும் இவ்­வாறு காணிகள் இரா­ணுவம் வசம் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஏழு தலை­மு­றை­யாக பொது­மக்கள் வச­மி­ருந்த காணி­களை இன்று எவ்­வாறு இரா­ணு­வத்தின் காணிகள் என உரி­மை­கோர முடியும். இவை  நியா­ய­மான கருத்­துக்கள் அல்ல. அதே­போன்று  மகா­வலி அபி­வி­ருத்தி என கூறிக்­கொண்டு புதி­தாக காணி­களை தன்­வ­சப்­ப­டுத்தும் வர்த்­த­மா­னிகள் தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவை குறித்து ஜனா­தி­பதி கவனம் செலுத்த வேண்டும் என்ற கார­ணி­களை  ஸ்ரீதரன் எம்.பி சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இதே­வேளை கேப்­பா­பி­லவு காணி­களை விடு­விக்க என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். தொடர்ந்தும் எமது மக்கள் போரா­டிக்­கொண்டு இருக்க முடி­யாது ஆகவே ஒரு உறு­தி­யான பதில் வேண்டும் என்ற கார­ணி­களை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராச சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். அதேபோல் மாவை சேனா­தி­ராஜா எம்.பியும் மயி­லிட்டி, பலாலி பகு­தி­களில் காணி­களை விடு­விக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்தார். மயி­லிட்டி பிர­தே­சத்தில் 1500 குடும்­பங்கள் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளமை குறித்தும் மாவை சேனா­தி­ராஜா எம்.பி எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தார்.

எனினும் காணி விடு­விப்பு விவா­க­ரத்தில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பல கார­ணி­களை முன்­வைத்தும் ஜனா­தி­பதி அதற்­கான அக்­கறை செலுத்­தி­ய­தாக தெரி­ய­வில்லை என்ற கருத்­தினை  தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் சார்பில் கலந்­து­கொண்ட உறுப்­பி­னர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர்.

வடக்கில் படை­யினர் வச­முள்ள காணிகள் என்ன என்­ப­தையும் எத்­தனை ஏக்கர் காணிகள் உள்­ளன என்­ப­தையும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் எழுத்து மூலம் அறி­வித்தால் அது குறித்து கவனம் செலுத்த முடியும் என்­பதை ஜனா­தி­பதி கூட்­டத்தின் போது தெரி­வித்­துள்ளார். அத்­துடன் இரா­ணுவம் வச­முள்ள காணி­களை விடு­விக்க முடி­யுமா முடி­யாதா என்­பதை இரா­ணு­வமே தீர்­மா­னிக்க வேண்டும் எனவும் வடக்கில் இரா­ணுவம் வச­முள்ள காணிகள் குறித்த இறுதி நிலைப்­பாட்டை எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் முதலாம் திக­திக்கு முன்னர் பாது­காப்பு தரப்­பினர் தனக்கு அறி­விக்க வேண்டும் என்றும்  ஜனா­தி­பதி கூட்­டத்தில் தெரி­வித்­துள்ளார்.

மயி­லிட்டி பலாலி காணி விவா­க­ரத்தில் உரிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாது­காப்பு அதி­கா­ரிகள் நேரில் சென்று நிலை­மை­களை பார்­வை­யிட்டு ஒரு முடி­வினை எடுக்­கு­மாறும் ஜனா­தி­பதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ஏனைய காணிகள் குறித்த விவகாரங்கள்   தொடர்பில்  ஆராய எதிர்வரும் 12 ஆம் திகதி வடக்கு ஆளுநருடன் சந்திப்பொன்று  ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த அந்திப்பு ஆக்கபூர்வமான ஒன்றாக இருக்கவில்லை என்பதையும் பல தடவடிகைகள் வடக்கின் காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதிக்கு உரிய காரணிகளை தெரிவித்தும் எழுத்துமூலம் கேட்பது வேடிக்கையான ஒன்றாகவும் எம்மீது அவருக்கு அக்கறை இல்லை என்பதையுமே வெளிப்படுத்தியுள்ளது எனவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின்  தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை .

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version