குருநகர் மக்களின் எதிர்ப்பால் 5ஜி தொழில்நுட்ப கோபுரங்கள் கொழும்பு திரும்பின

5ஜி தொழில்நுட்ப கோபுரம் அமைப்பதற்கு, கொழும்பில் இருந்து கொண்டு வரப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரங்கள் அனைத்தும், குருநகர் மக்களின் எதிர்ப்பால், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம், நேற்று  (17) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில், பரிச்சயமாக சேவை வழங்கும் நடவடிக்கைக்கு, மாநகர சபையால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கைக்கு பிரதேச மக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுன்னக்கட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று (17) குருநகர் கிழக்கில் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில், 5ஜி தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கென கொழும்பிலிருந்து தொலைத்தொடர்பு கோபுரங்கள் கொண்டுவரப்பட்டன.

இதையறிந்த பிரதேச மக்கள், அப்பகுதியில் ஒன்றுகூடி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இதையடுத்து, கொழும்பு இருந்து கொண்டுவரப்பட்ட கோபுரங்கள் அனைத்தும் மீண்டும் திரும்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.