482 Views
முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலய பாடசாலையின் மாணவர் திறன்காண் மெய்வல்லுனர் போட்டி நேற்று (30.01) பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை அதிபர் க.ஜெயவீரசிங்கம் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வானது மங்கள விளக்கேற்றி தேசிய மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு உடற்பயிற்சி கண்காட்சியுடன் ஆரம்பமான இதேவேளை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கட்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லை வலய உதவிகல்வி பணிப்பாளர் தே.தேவதாஸ் (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்) , சிறப்பு விருந்தினராக முல்லை வலய உதவிகல்வி பணிப்பாளர் த.மதியழகன் (தமிழ்) , கௌரவ விருந்தினராக திருஞானசம்பந்தகுருக்கள், போன்றோரும் பொதுமக்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.