வரும் வாரம் 2025, மார்ச் 17, தொடக்கம், 20 வரை உள்ளூராட்சி சபை தேர்தலுக் கான வேட்பு மனுக்கள் சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களால் கையேற்கப் பட்டு 20ம் திகதி தேர்தலுக்கான திகதி உத்தி யோகபூர்வமாக தேர்தல் ஆணைக்குழுவால் அறி விக்கப்படவுள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் ஏப்ரல் 21 க்கும் மே 10க்கும் இடையில் ஒரு திகதியில் தேர்தல் இடம்பெற வாய்புகள் உள்ளன. வடக்கு கிழக்கை பொறுத்தவரை எட்டு மாவட்டங்களில் 04 மாநகரசபைகளும், 10 நகரச சபைகளும், 65 பிரதேச சபைகளுமாக மொத்தமாக 79 சபைகள் உள்ள இதில் தமிழ் உறுப்பினர்களை கொண்டு ஆட்சியமைக்கும் சபைகள் ஏறக்குறைய 65 சபைகள் அடங்கும். இறுதியாக 2018ல் உள்ளூராட்சிசபை தேர்தல கலப்பு முறை அறிமுப்படுத்தப்பட்டு முதலாவது தேர்தல் இடம்பெற்றது அதில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வட்டார ரீதியாக 69 ஆசனங்களும் விகிதாசார ரீதியாக 06 ஆசனங்களுமாக 75 ஆசனங்கள் கிடைத்தன.
திருகோணமலையில் வட்டார ரீதியாக 33 ஆசனங்களும், விகிதாசார ரீதியாக 03 ஆசனங்
களுமாக 36 ஆசனங்கள் கிடைத்தன. அம்பாறை மாவட்டத்தில் வட்டாரத்தில் மட்டும் 27 ஆசனங் கள் கிடைத்தன.விகிதாசாரத்தில் கிடைக்க வில்லை. அதேபோல் வடமாகாணத்தில் யாழ்ப்
பாண மாவட்டத்தில் வட்டார ரீதியாக 141 ஆசனங்களும், விகிதாசார ரீதியாக 12 ஆசனங்களு மாக 153 ஆசனங்கள் கிடைத்தன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டார ரீதியாக 30 ஆசனங்களும் விகிதாச ரீதியாக 02 ஆசனங்களும் 32 ஆசனங்கள் கிடைத்தன. வவுனியாமாவட்டத்தில் வட்டாரத் தில் 31 ஆசனங்களும் விகிதாசாரத்தில் 01 ஆச மும் 31 ஆசனங்கள் மன்னார் மாவட்டத்தில் வட்டாரத்தில் 25 ஆசனங்களும் விகிதாரத்தில் 03ஆசனங்களும் 28 ஆசனங்கள் கிடைத்தன.
கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டாரத்தில் 33 ஆசனங்களும் விகிதாசாரத்தில் 01 ஆசனமும் 34 ஆசனங்கள் கிடைத்தன. இதன்படி தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் கிழக்கு மாகணத்தில் வட்டார ரீதியாக 102 உறுப்பினர்களும், விகிதாசாரத்தில் 08 உறுப்பினர்களுமாக மொத்தம் 110 உறுப்பினர்கள் தெரிவானார்கள். வடமாகாணத்தில் வட்டார ரீதியாக 289 உறுப்பினர்களும் விகிதாசார ரிதியில் 20 உறுப்பினர்களும் தெரிவானார்கள்.
மொத்தமாக வடகிழக்கில் இருந்து வட் டாரத்தில் 389 உறுப்பினர்களும், விகிதாசாரத்தில் இருந்து 28உறுப்பினர்களுமாக மொத்தமாக 417 உறுப்பினர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பால் உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதி நிதிக ளாக பதவியில் இருந்தனர். மொத்தமாக 337,877 வாக்குகள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு 2018ல் கிடைத்தது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக இலங்கை தமிழ் அரசுக்கட்சி, ரெலோ, புளட் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து சபைக ளில் வேட்பாளர்களை நிறுத்தி தெரிவு செய்யப்பட்ட வர்களே அந்த 417 உறுப்பினர்கள் சுருக்கமாக கூறுவதானால் மூன்று கட்சிகளின் கூட்டுமுயற்சி எனலாம். ஆனால் 2025 தற்போதய உள்ளூராட்சி சபை தேர்தலில் மூன்று கட்சிகளும் இரண்டு கட்சிகளாக மாறி இரண்டு சின்னங்களில் போட்டியிடுகின்றன.
அதைவிட வேறு தமிழ்தேசிய கட்சிகளும் வழமை போன்று போட்டியிடுகின்றன. சுயேட்சை குழுக்களாகவும் போட்டியிடுகின்றன. இதனால் 2018ல் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த 417 உறுப்பினர்களை எந்த ஒரு தமிழ்த்தேசிய கட்சிகளும் மெறுவதற்கான சந்தர்ப்பம் அரிதாகவே உள்ளது. ஆனால் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஆளும் தரப் பாக தேசிய மக்கள் சக்தியின் அநுர அலை 159 ஆசனங்களை பிடித்து ஆட்சியில் உள்ள நிலையில் வடகிழக்கில் இருந்தும் ஏழு தமிழர்
கள் அதே கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகி உள்ளனர். தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்து ஐந்து மாதங்களால் இந்த உள் ளூராட்சி சபை தேர்தல் இடம்பெறப்போகின்றது.
இதன் தாக்கம் எந்தளவில் வடகிழக்கில் இடம்பெறும் என்பதை பார்த்தால் தேசிய மக்கள் சக்தி அரசின் பார்வை தென்பகுதிகளை விட வடகிழக்கில் அதிக கவனம் செலுத்தப்படுவதை காணலாம். அதற்கான காரணம் ஏற்கனவே ஜெனி வாவில் ஆளும் தரப்பு வெளிவிவகார அமைச்சர் வடகிழக்கு மக்களும் தம்மை ஆதரித்துள்ளனர் என்பதை கூறி அங்குள்ளவர்களும் சமத்துவமாக வாழ விரும்புகிறார்கள் என்பதை நிருபித்தார். இந்த கூற்றை மேலும் உறுதிப்படுத்த வேண்டிய நோக்கில் வடகிழக்கில் கணிசமான சபைகளை கைப்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயல்படுவது கண்கூடு. வடக்கு கிழக்கில் 35 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்களையும், யுவதிகளையும் குறிவைத்து உள்ளூராட்சி சபைகளில் வேட்பாளர் களை நிறுத்தும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைப்பாளர்க ளும் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இதனால் கணிசமான வட்டாரங்களில் வெற்றிபெறக்கூடிய வாய்புகள் உண்டு. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே மட்டக் களப்பில் தேசிய மக்கள் சக்தியிலால் தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விரைவில் வடகிழக்கு முழுவதும் தேசிய மக்கள் சக்தி கைவசம் வந்துவிடும் என கூறியதை அவதானிக்க முடிகிறது. தமிழ்த்தேசிய கட்சிகளை பொறுத்தவரை ஒற்றுமையாக உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகவில்லை, தனித்தனியாக ஏறக்குறைய ஐந்தாக பிரிந்துதான் வடகிழக்கில் போட்டியிடவுள்ளனர்.
பிரதான தமிழ்தேசிய கட்சியான இலங் கைத் தமிழ் அரசுக்கட்சியும் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் சிக்கல் நிலைமை உள்ளது. ஒழுக்காற்று நடவடிக்கை என்ற போர்வையில் உண்மையான தமிழ்த்தேசிய வாதிகள் ஓரம் கட்டப்படுகின்றனர். நாடு அநுராவோடு ஊர் எங்களோடு என்ற ஒரு கோஷத்தை அண்மையில் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரன் கூறியிருந்தார். இதில் இருந்து நாடு என்பது என்ன? ஊர் என்பது என்ன? ஊர்களும் நாட்டில் அல்லவா உள்ளது. அப்படியானால் ஊர்களிலும் திசைகாட்டிக்கு இடம் கிடைக்கும் என்பதுதான் அர்த்தம். ஆனால் யார் போட்டியிட்டாலும் வடகிழக்கில் தனித்து எந்த கட்சியும் ஆட்சியமைக்க வாய்பில்லை தொங்கு நிலை சபைகளாகவே தொடரும் தேர்தல் முடிந்தகையோடு பதவிகளுக்காக கட்சிகளுக்கு இடையே முரண்பாடுகளும் ஏற்படக்கூடும் என் பதே உண்மை.