குடும்பச் சண்டையை தடுக்கச் சென்ற ஸ்ரீலங்கா இராணுவச் சிப்பாய்க்கு ஏற்பட்ட பரிதாபம்!

குடும்பச் சண்டையை தடுக்கச் சென்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை-கூலிகொட-வில்லிகொட பிரதேசத்தில் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு குறித்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

நண்பர் ஒருவர் அவரது மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட போது, இருவரையும் சமாதானம் செய்ய முயற்சித்த போதே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 21 வயதுடைய விஜயபா இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் என முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply