சிறீலங்காவில் குறைவடைந்திருந்த டெங்கு நோய் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதாக சிறீலங்கா டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னைய வருடத்துடன் ஒப்பிடும்போது டெங்கு நோயின் தாக்கம் சிறீலங்காவில் மிகவும் குறைவடைந்திருந்தது. ஆனால் தற்போது அது மீண்டும் அதிகரித்து வருகின்றது. கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை பகுதிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 9 மாதங்கயில் 30 பேர் இந்த நோயினால் இறந்துள்ளனர். கோவிட்-19 நோயின் தடுப்பு முறைகளால் டெங்கு நோயின் தாக்கம் இந்த வருடம் குறைந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.