கிழக்கு பல்கலையில் தஞ்சமடைந்தவேளை காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 34ஆவது ஆண்டு நினைவேந்தலும் ஆர்ப்பாட்டமும்

WhatsApp Image 2024 09 05 at 11.43.35 4 கிழக்கு பல்கலையில் தஞ்சமடைந்தவேளை காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 34ஆவது ஆண்டு நினைவேந்தலும் ஆர்ப்பாட்டமும்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச்சென்று காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 34வது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை (05) அனுஷ்டிக்கப்பட்டதுடன் காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டமும் இடம்பெற்றது.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முகாமில் தஞ்சமடைந்தவர்களில் 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டாலும்  மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள்.