மட்டக்களப்பு மாவட்டத்தின் போதைப்பொருள் தடுப்புவு செயலணியின் மாவட்ட மட்ட கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பணிமனையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த தலைமையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், மாவட்டத்தில் தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அதிகளவான இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருவதாகவும் அதிலும் பாடசாலை மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் 13வயது முதல் 17வயதினர் தான் போதிய விழிப்புனர்வு மற்றும் பெற்றோரின் கண்கானிப்பின்றி வழிதவறுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இவ்வாண்டு 2020-01-01 முதல் இன்று வரையும் கேரோயின் வைத்திருந்த குற்றத்திற்காக 190பேரும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 28பேரும் கஞ்சா வைத்திருந்த 245 பேரும் கொடா வைத்திருந்த குற்றத்திற்காக 155பேரும் கசிப்பு உற்ப்பத்தியிலும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என 870பேரும் மொத்தம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1488 பேருக்கு போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கிழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சந்திப்பில் மாவட்டத்தில் பாடசாலை மட்டத்தில் இருந்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையினை ஆரம்பிப்பதற்கும் அதிலும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் முதல் முறையாக முன்னெடுப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.