‘கிளீன் சிறிலங்கா’  மலையக கல்வி அபிவிருத்திக்கு வாய்ப்பாகுமா? – துரைசாமி நடராஜா

நாட்டில் சகல துறைகளிலும் முன் னேற்ற கரமான திருப்பு முனையை ஏற்படுத்துவதற்காக  ‘கிளீன்சிறிலங்கா’ வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப் படுகின்றது.  இவ்வேலைத்திட்டம் வெற்றிபெற சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அண் மையில் வலியுறுத்தி இருந்தார்.  இந்நிலையில் பாடசாலைகளில் நிலவும் பல்வேறு சீர்கேடு களையும் இல்லாதொழித்து சீரான கல்வி அபிவிருத்திக்கும், மாணவர் மேம்பாட்டிற்கும் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக வேலைத்திட்டங்கள் பலவற்றையும் முன்னெடுக்க வேண்டிய வழிமுறைகள் தொடர் பில் புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி பீடமேறியுள்ள நிலையில் நாட்டின் நலன் கருதி பல்வேறு திட்டங்களையும் வகுத்து செயற்படுகின்றது. ஊழல் ஒழிப்பு, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுதல், மக்களுக்கு வலுவான மற்றும் பாதுகாப்பான தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரசியல் நிகழ்ச்சி நிரலை தயாரித்து நடைமுறைப்படுத்துதல், மோசடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்றியமைத்தல், சகல துறைகளிலும் நிலவும் சீர்கேடுகளை களைந்து அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்லுதல் என்பன இத்தகைய திட்டங்களின் பிரதான நோக்கமாகும். இவ்விலக்கினை அடையும் நோக்கில் ஒன்றாக ‘கிளீன்சிறிலங்கா வேலைத்திட்டத்தினை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
முன்னேற்றக் கூறுகள்எந்தவொரு வலுவான கட்டத்தையும் நிர் மாணிப்பதற்கும் அல்லது எந்தவொரு வெற்றி கரமான திட்டத்தை தொடங்குவதற்கும் உறுதியான அடித்தளம் அவசியமாகும். எவ்வாறாயி னும் எமது தேசம் அதன் அடித்தளத்தை இழந்த ஒன்றாகும். இந்தக் காரணத்திற்காக இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அடிப்படை அடித்தளத்தை வெற்றிகரமாக நிறுவுவதில் அரசாங்கம் அதன் ஆரம்ப முயற்சிகளில் கவனம் செலுத்தியுள் ளது. இந்த அடித்தளம் அரசியல் அதிகாரம், அரச வழிமுறைகள், சட்டத்தின் ஆட்சி, அரசியல மைப்பின் கௌரவம் மற்றும் பாதுகாப்பு, ஊழல், மோசடி மற்றும் இலஞ்சத்தை ஒழித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தக் கூறுகள் தேசத்தை முன்னேற்றுவதற்குத் தேவையான அடித்தளமாக அமைகின்றன. இந்த அடித்தளத்தை அரசாங்கம் விரைவாகவும், முறையாக
வும் அமைத்து வருகின்றது. இந்த அடித்தளத் தில் கட்டமைக்கப்பட்ட வலுவான பொருளாதாரத் தின் பலன்கள் எமது மக்களை சென்றடைய வேண்டும் என்று ஜனாதிபதி ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உரை யாற்றுகையில் தெரிவித்திருந்தார்.
இந்தவகையில் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் ஊடாக நாட்டில் மிகப்பெரிய பணிகளை ஆற்றவேண்டிய பொறுப்பு நிலை காணப்படுகின்றது. இதனடிப்படையில் நாட்டின் கல்வித்துறையை எடுத்துக் கொண்டால் இத்துறையின் குறைபாடுகள் பலவற்றையும் இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக நிவர்த்தி செய்ய  வேண்டியதன் அவசியத்தை நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி. யு. பி. மணியன்கம பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.   நாட்டில் அண்மைகாலமாக பாடசாலைக்குச் செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. கொரோனா இதனை மேலும் அதிகப்படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் பாடசாலைக்குச் செல்லாதோர் வரிசையில் மலையக மாணவர்கள் அதிகமாகவே  உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 2012/2013 ம் ஆண்டின் தகவலொன்றுக்கமைய நாட்டில் பாடசாலைக்குச் செல்லாத மாணவர்க ளின் எண்ணிக்கை 3. 7 வீதமாகக் காணப்பட்டது.  நகரத்தில் இது 2. 2 , கிராமத்தில் 3. 5 வீதமாகக் காணப்பட்ட நிலையில் பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலைக்குச் செல்லாத மாணவர் களின் எண்ணிக்கை 12. 2 வீதமாகும்.
இதேவேளை 5 ம் தரம் வரை பயின்றோர் நாட்டில் 24. 7, நகரத்தில் 19. 2, கிராமத்தில் 25 வீதமாகக் காணப்பட்ட நிலையில் பெருந்தோட்டப் பகுதிகளில் இது 42 வீதமாக இருந்தது. அவ்வாறே பெருந்தோட்டப் பகுதிக ளில் க. பொ. த. உயர்தரம் மற்றும் அதற்கு மேல் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கையும் பலமட ங்கு குறைந்து காணப்பட்டது. உலகவங்கி 2007 ம் ஆண்டில் மேற்கொண்ட மதிப்பீடு ஒன்றிற்கமைய நாட்டின் எழுத்தறிவு வீதம் 92. 5 ஆகவிருந்த நிலையில் பெருந்தோட்ட மக்களின் எழுத்தறிவு வீதம் 81. 3 ஆகும். முதலாம் தரத்திற்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களில் 58 சதவீதமான பெருந்தோட்ட மாணவர்களே ஆரம்பக் கல்வியை கற்று முடித்தவர்கள். யுனிசெப் அமைப்பின் 2015 ம் ஆண்டின் அறிக்கையொன்றின்படி ஆரம்பநிலை கல்வி வயதெல்லையில் உள்ள பிள்ளைகளில் இரண்டு வீதமானோர் பாடசாலைகளில் இல்லாதுள்ளனர் என்று தெரியவருகின்றது.
விரிவுரையாளர் சோபனாதேவிஒன்பது மாகாணங்களில் இது 1. 4 சதவீதமாக இருந்தது. ஆனால் பெருந்தோட்ட மாவட்டம் பாடசாலைகளில் இவ்வீதமானது 9 ஆக காணப்பட்டது. பெருந்தோட்டத்துறையில் உள்ள பாடசாலைகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 10. 5 வீதம் தொடக்கம் 25 வீதமான மாணவர்கள் இடைவிலகுவதாக 2010 ம் ஆண் டில் டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் மேற்கொண்ட ஆய்வு புலப்படுத்துகின்றது. இதேவேளை இடைவிலகலைக் கட்டுப்படுத்த ஒரு வழி அவ்வாறு இடைவிலகக்கூடிய மாணவர் களை இனங்காணுதலாகும். இதற்கு மாணவர் வருகை, கல்விச் சித்தி, கல்விச் செயற்பாடுகளில் பங்கேற்பு முதலியவற்றை இனங்காணுதலாகும். இவற்றின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னதாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளமை நோக்கத்தக்கதாகும்.
பெருந்தோட்டப் பாடசாலைகளில் பாடசாலைக்குச் செல்லாதோர் அல்லது இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்ற நிலையில் இவற்றைக் கட்டுப்படுத்தி மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துவரும் நோக்கில் ‘கிளீன் சிறிலங்கா ‘ வேலைத்திட்டத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
சிறுவர்களை வேலைக்கமர்த்தும் நிலை மைகள் குறித்து தொடர்ச்சியாகவே கண்டனங்கள் பலவும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களின் கல்வி பாழாவதோடு அவர்களின் எதிர்காலமும் சூனியமாகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. மலையகத்தில் சிறுவர்களை வேலைக்கமர்த்தும் நிலைமைகள் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர். சோபனாதேவி தனது கட்டுரையொன்றில் தெளிவாக சுட்டிக்காட்டி இருக்கின்றார். இதன்படி 2015 காலப்பகுதியில் பெருந்தோட்டத்துறையில் 06 – 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 10. 3 வீதமான ஆண் பிள்ளைகளும், 14. 6 வீதமான பெண் பிள்ளைகளும் முழுநேர தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவலுக்கமைய பெருந் தோட்டத்துறையில் 12. 4 வீதமான சிறுவர்கள் முழுநேரத் தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் 3. 8 வீதமான சிறுவர்கள் எவ்விதமான குறிப்பிடத்தக்க நட வடிக்கைகளிலும் ஈடுபடாது வெறுமனே தோட்டங்களில் சுற்றித்திரிவதாகவும் கண்டறியப் பட்டுள்ளது.
தொழில் உரிமை மீறல் சிறுவர் தொழிலாளர்களின் தொழில் வகை தொடர்பில் நோக்குகின்றபோது, வீட்டுப் பணியாளர்களாக 15. 5 வீதமான ஆண்களும், 85. 5 வீதமான பெண்களும் தொழில்புரிந்து வருகின்றனர். வர்த்தக நிலையங்களில் 24. 8 வீதமான சிறுவர்களும், நாட்கூலிகளாக 16. 8, கால்நடை வளர்ப்பு 2. 2, ஏனையவை 5. 7 சதவீதமென சிறுவர் தொழிலாளர்களின் தொழில் நிலைகள் அமைந்து விளங்குகின்றன. இச்சிறுவர்கள் காலை 5. 00 மணி தொடக்கம் இரவு 9. 00 மணிவரை தொடர்ந்தும் வேலைசெய்ய வேண்டும். இவர்களுக்கு மதிய உணவிற்காக குறைந்த நேரமே (30 – 40 நிமிடங்கள்) வீட்டு எஜமானர்களால்  அனுமதிக்கப்படுகின்றது. அது மட்டுமன்றி வீட்டுப் பணியாளர்களாக தொழிலுக்கு அமர்த்தப்படும் பிள்ளைகள் மிகவும் மோசமான பாதிப்புக்களுக்கும் உள்ளாகின்றனர். இங்கு தொழில் புரியும் சிறுவர்களின் உரிமைகள் முழுமையாகவே மீறப்படுகின்றன. அவர்களின் சுயமான சிந்தனை மற்றும் செயற்பாடுகளுக்கு எவ்வித இடமும் வழங்கப்படுவதில்லை.
பெற்றோரின் அன்பினையும், பாதுகாப் பினையும் வேண்டி நிற்கும் சிறுவர்களுக்கு வெறுமனே அவர்களது எஜமானின் துன்புறுத்தல்களும்,ஆதிக்கங்களும், பாரபட்சங்களுமே கிடைக்கின்றன. மேலும் இச்சிறார்கள் பல துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக வேண்டிய துரதிஷ்ட நிலைக்கு தள்ளப்படுவதாகவும் விரிவுரையாளர் சோபனாதேவி குறிப்பிடுகின் றார். சமகாலத்திலும் மலையகப் பகுதிகளில் சிறுவர்கள் பலர் தொழிலுக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில் இவர்களை மீட்டெடுத்து கல்வி யுலகுக்கு இட்டுச் செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது. இந்நிலையில் ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டத்தின் ஊடாக சிறுவர் தொழிலாளர் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளை முடுக்கி விடப்படுதல் வேண்டும்.
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் தாய்மாரின் எண்ணிக்கை அதி கரித்து காணப்படுகின்றது. இதனால் பல குடும் பங்களில் பிள்ளைகள் உரிய அன்பு, காப்பு, கணிப்பு இல்லாது நெறிதவறிச் செல்வதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதனால் பல சிறுவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில் இது இவர்களின் கல்வி நிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மத்திய கிழக்கில் உழைத்தனுப்பும் பணத்தை குடித்து கும்மாளமிட்டு, கூத்தியாருக்கும் செலவு செய்யும் சில கணவன்மார் பிள்ளைகளின் நலன்களை புறந்தள்ளி செயற்படுகின்றனர். இதனால் பிள்ளைகள் நட்டாற்றில் தள்ளி விடப்படுகின்றனர்.
வீதியோர சிறுவர்கள்இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அல்லது ஏனைய வெளிநாடுகளுக்குச் செல்லும் தாய்மாரின் பிள்ளைகளின் அபிவிருத்தி கருதி விசேட திட்டங்களை வகுத்து செயற்படுத்துதல் வேண்டும். ’கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டம் இதற்கொரு வாய்ப்பாக அமைதல் வேண்டும். இதைப்போன்றே வீதியோரச் சிறுவர்கள் பலர் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலை யில் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் சில கரையோரப் பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகளின் காம இச்சைக்கும் இவர்கள் பலியாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின் றன. இத்தகைய சிறுவர்களின் நலன் கருதியும் வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்படுவது மிகவும் அவசியமாகும்.
\வீதியோரச் சிறுவர்களை பாடசாலைக்கு உள்வாங்கும் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. எனினும் சில ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் ஏற்றுக்கொள்ளாத தன்மை இம்மாணவர்கள் பாடசாலைக் கல்வியை பெற்றுக் கொள்வதற்கு இடையூறாக அமைந்தது என்பதும் நீங்கள் அறிந்ததேயாகும்.
‘கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டத்தின் ஊடாக தூய்மைப் படுத்தப்பட வேண்டிய மற்றுமொரு விடயம் சில பாடசாலைகளில் மாணவர்களிடையே நிலவும் போதைப்பொருள் பாவனையாகும். மலையகத்திலும் இதன் தீவிரத்தை ஒரு சில இடங்களில் காண முடிகின்றது. ’ஒரு நாட்டை அழித்து விடுவதற்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை. ஒரு நாட்டின் இளைஞரை போதைப் பொருளில் மாட்டிவிட்டால் அந்நாடு முழுவதும் திக்கற்று துன்பத்தில் அல்லல்படும். பௌதிக அழிவுகளின் சிதைவுகளிலிருந்து ஒரு நாட்டை கட்டியெழுப்பலாம். ஆனால் உளரீதியாக இளைஞர் அழிக்கப்பட்ட ஒரு நாட்டுக்கு எவ்விதத்திலும் விமோசனம் கிடைக்க மாட்டாது ‘ என்பது பேராசிரியர் ஆர். எம். கல்றாவின் கருத்தாகும். போதைப் பொருட்களுக்கு அடிமையாகி கல்வியையும், உயிரையும் பலிகொடுத்த இளைஞர் யுவதிக ளின் எண்ணிக்கை உலகளாவிய ரீதியில் மிகவும் அதிகமாகும். இந்நிலையை இனியும் தொடர விடலாகாது.
பௌதிகவள மேம்பாடுமலையக பாடசாலை மாணவர்களை மையப் படுத்தி போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கும்பல்களின் அல்லது வர்த்தகர்களின் எண்ணிக்கை அண்மைகாலமாக அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் உண்மை இல்லாமலும் இல்லை. இந்நிலையில் பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டம் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டிய தேவையுள்ளது. இதேவேளை பாடசாலைகளின் பௌதிகவள மேம்பாட்டை கருத்தில் கொண்டு உடைந்த தளபாடங்களை சீர்செய்யும் நடவடிக்கைகள் பொலிஸாரின் உதவியுடன் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத்திட்டம் இலங் கைக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இத்திட்டத்தின் ஊடாக இலங்கையின் சகல துறைகளும் புனிதமடைகின்றன. எனவே இதன் முக்கியத் துவத்தை கருத்தில் கொண்டு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் அனை வரும் மாற்றத்திற்கான செயற்பாட்டுக்கு உச்ச கட்ட பங்களிப்பினை வழங்க வேண்டும். புதிய ஆண்டில் தேசத்துக்குத் தேவையான மாற்றத்துக் கும் முன்னேற்றத்துக்கும் இந்த கூட்டு முயற்சி மிகவும் இன்றியமையாதது என்ற ஜனாதிபதியின் வார்த்தைகளையும் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.