காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் 4 ஆண்டுகளை (1,460 நாட்கள்) எட்டியுள்ளது.
இதனை முன்னிட்டு, இன்று தலையில் தீச்சட்டி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம்
ஒன்றை காணாமல் ஆக்கப்படடோரின் உறவுகள் முன்னெடுத்துள்னர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கறுப்பு ஆடைகளை அணிந்து, “சர்வதேசமே இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்து”
என்பதனை பிரதான கோரிக்கையாக முன்வைத்து, கோஷமெழுப்பி போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்ப போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன்
(20) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தீச்சட்டி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
(20) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தீச்சட்டி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இப்போராட்டமானது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் வரை சென்றடைந்தது.