கார்த்திகை விளக்கேற்றியவர்களுக்கு இராணுவம் அச்சுறுத்தல்

566 Views

மாவீரர் கிளிநொச்சி மாவட்டத்தில் கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டுள்ளனர்.

நேற்று மாலை பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காகத் தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதி இராணுவத்தினரால் மிரட்டப்பட்டு விளக்குகளும் தூக்கிவீச்சப் பட்டதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வழமைபோல் கார்த்திகை விளக்கீட்டுக்காக வீட்டு முற்றத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் வளவின் உள்ளே வந்த இராணுவத்தினர் விளக்குகளைத் தூக்கி வீசியுள்ளனர்.

அதன் பின்னர் வயோதிபத் தம்பதியினரைத் துப்பாக்கியால் தாக்கவும் முயன்றுள்ளனர்.

பரந்தன் இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களே இராணுவச் சீருடையில் இவ்வாறு அச்சுறுத்தியமையுடன் தாக்க முற்பட்டனர் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை சிவில் உடையில் இரண்டு இரானுவத்தினரும், சீருடையுடன் இரண்டு இராணுவத்தினரும் பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்துக்கு முன்பாகவுள்ள வீட்டுக்குச் சென்று கார்த்திகைத் தீபங்களைத் தூக்கி வீசிவிட்டு அவற்றைக் காலால் மிதித்து வீட்டிலிருந்த பெண்களையும் அச்சுறுத்தி அவதூறான வார்த்தைகளால் பேசியுள்ளனர் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

Leave a Reply