கார்த்திகை திருநாளில் பொலிஸாரின் அச்சுறுத்தல் கண்டிக்கத்தக்கது

423 Views

ஆன்மீக செயற்பாடுகளை செயல்படுத்த யாரிடமும் அனுமதி பெறவோ அல்லது அவர்களிடம் கேட்கவோ எமக்கு தேவையில்லை என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் மதகுருவுமான சிவசிறி ஜெ. மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

கிளிச்நொச்சியில், கார்த்திகை திருநாளுக்கான நேற்று விளக்கேற்றிய பெண்கள் உள்ளிட்டவர்கள் கடுமையாக அச்சசுறுத்தப்பட்டிருந்தனர். அத்தோடு யாழ் பல்கலையில் மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கார்த்திகை திருநாளில் சில ஆலயங்களில் இவ்வாறு பொலிஸார் செய்த செயல் கண்டிக்கத்தக்கது என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவரும் மதகுருவுமான சிவசிறி ஜெ. மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் குறித்து ஊடகங்களுக்கு இன்று அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply