உலகில் உள்ள அனைவரும் உயிருக்கு அடுத்ததாக மதிக்கும் விடயமாக ‘காணி’ காணப்படுகிறது. ‘காணி’ என்பது பெறுமதி மிக்க சொத்தாகும். அவ்வாறே ‘காணி’ என்பது நாளாந்தம் பெறுமதி அதிகரித்துச் செல்லும் சொத்தாகும்.
அவ்வாறிருக்கையில் வடக்கு, கிழக்கில் ‘காணி’ என்பது இனமொன்றின் இருப்பு சார்ந்த விடயமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக, தமிழ் மக்களுக்கு இனம்சார்ந்த எதிர்கால இருப்பை உறுதி செய்வதற்கான அடிப்படையாக காணப்படுகிறது.
ஏனென்றால், வடக்கு, கிழக்கில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அரச கட்ட மைப்புக்களான படைகள், தொல்பொருளியல் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா, பௌத்த தேரர்கள், மகாவலி அதிகாரசபை உள்ளிட்டவை ‘திட்டமிட்டு’ ஆக்கிர மித்துள்ளன. அடுத்துவரும் காலப்பகுதியில் ஆக்கிரமிப் பதற்கான காரணகரியங்களும் கனகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. இந்த ஆக்கிரமிப்பின் அடிப்படை, தமிழர்களின் தாயக கோட்டை நீர்த்துப் போகச் செய்வதும், குடிப்
பரம்பலை மாற்றி ‘பூர்வீக குடிகள்’ என்ற அடையாளத்தையும் அங்கீகாரத்தினை இழச் செய்வதுமாகும்.
இதற்கான ‘கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்’ 1949ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க தலைமையில் கிழக்கு மாகாணத்தில் விவசாயி களை குடியேற்றுதல் என்ற பெயரால் முன்னோடி செயற்பாடாக முன்னெடுக்கப்பட்ட ‘கல்லோயா’ திட்டத்திலிருந்து ஆரம்பமாகியது. தற்போது வரையில் அது தொடர்கதையாகவே உள்ளது.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள கடந்த 16ஆண்டுகளில் தமிழர்களின் நிலமீட்புக்
கான போராட்டங்கள் முழு வீச்சுடன் முன்னெடுக்கப்படுகின்றன. ஏனென்றால் ஆக்கிரமிப்புக் களும், திட்டமிட்ட சுவீகரிப்புக்களும் நீடித்துக் கொண்டிருக்கின்றன.
அவ்வாறான நிலையில், தான் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி தற்போது ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான ‘தோழமை’ அரசாங்கம் ‘காணிகள்’ என்ற தலைப்பில் வர்த்தமானி அறிவித்த லொன்றைப் பிரசுரித்துள்ளது.
அந்த அறிவித்தலில் ‘காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவுக்கு அமை வாக மார்ச் 28ஆம் திகதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பட்டியலிடப்பட்டுள்ள காணிகள் குறித்த உரித்துக்கள் உறுதி செய்யப்படாதவிடத்து கட்டளைச்சட்டத்தின் (5)1இற்கு அமைவாக அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்பட்டு அவைபற்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும்’; என்று குறித்து ரைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், யாழ்.மாவட்டத்தில் 3,669ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,703ஏக்கர் காணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 515ஏக்கர் காணிகளும் மற்றும் மன்னார் மாவட்டத்தில் 54ஏக்கர் காணிகளுமாக 5,941ஏக்கர் தனியார் காணிகளை குறிப்பிட்ட காலப்பகுதிகளுக்குள் உறுதிப்பத்திரத்துடன் உறு திப்படுத்தாவிடின் அவை அரசுடமையாக்கப்படும் நெருக்கடியானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது.
போரின் பின்னரான சூழலில் வடக்கிலும், கிழக்கிலும் காணி உரித்துக்களை உறுதி செய்தல், உரித்துடைய காணிகளுக்கு உரிமை கோருதல், அழிந்து போன ஆவணங்களை மீளப்பெறல்;, அக்கிரமிக்கப்பட்ட காணிகளை மீட்டெடுத்தல், உட்பட பல்வேறு பிணக்குகள் காணப்படுகின்றன.
அவைகுறித்த அரசாங்கத்தால் எந்தவொரு கவனமும் செலுத்தப்படவில்லை. காணிக்கச் சேரிகள் நடத்தப்படவில்லை. மாறாக திடீரென்று வர்த்தமானி அறிவித்தலில் ‘அடையாளப் படுத்தப்பட்ட’ இடங்களை மட்டும் மையப்படுத்தி காணி உரித்துக்களை உறுதி செய்வதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கியிருப்பதானது நிச்சயமாக ‘திரைமறைவு நிகழ்ச்சி நிரலைக் கொண்டது’ என்பதை உறுதி செய்கிறது.
குறித்த வர்த்தமானி அறிவிப்பு சம்பந்தமாக வட,கிழக்கில் எழுந்துள்ள எதிர்ப்பலைகள் அரசாங்
கத்தினை வர்த்தமானி அறிவித்தலை இலத்திரனி யல் பதிவிலிருந்து நீக்குவதற்கும் பேச்சுக்களை நடத்துவதற்குமானதொரு தவிர்க்கமுடியாத சூழலை உருவாக்கியிருந்தது.
அந்தவகையில் நேற்று முன்தினம் பாராளுமன்ற குழு அறையில் வட,கிழக்கு பிரதி நிதிகளுக்கும் பிரதமர் ஹரிணி, விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் லால்காந்த தலைமை யிலான குழுவினருக்கும் இடையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் முடிவுகள் எட்டப்படவில்லை. எனினும் இந்தச் சந்திப்பில் அமைச்சர் லால்காந்த அமைச்சு மட்டத்தில் ஆராய்ந்து பதிலளிப்பதாக கூறியிருக்கின்றார். பிரதி அமைச்சர் அருண் காணிப் பிரச்சினைகள் இருப்பதாக ஏற்றுக்கொள்கின்றார். பிரதமர் ஹரிணிக்கு விடய தானமே புதிராகத்தான் இருந்திருகிறது. ஆனால் அரசாங்கம் நிலைமைகளை உணர்ந்து வர்த்தமானியை மீளப்பெறுவதற்கு தயாரில்லை. வெறுமனே அமைச்சின் சுற்று நிருபங்களாலும், வாய்மூல வாக்குறுதிகளாலும் நிலைமையைச் சமாளிப்பதற்கே முயற்சிக்கின் றமை வெளிப்படையாக தெரிகிறது.
ஆகவே, ‘காணிகள்’ பற்றி வர்த்தமானி அறிவித்தல் குறித்து தொடர்ச்சியாக பேச்சுக்களை நடத்துவதும், ஆராய்ந்து பதிலளிப்பதாக கூறுவதும் காலத்தைக் கடத்தும் செயல். சூட்சுமமாக மூன்று மாதங்களை நகர்த்தி வர்த்தமானியை நடை முறைப்படுத்துவதற்கான முனைப்பாகவே இருகி றது.
அந்தவகையில் ‘காணிகள்’ வர்த்தமா னியை மீளப்பெறுவதற்கான வர்த்தமானி மீள் அறிவித்தல் செய்யப்பட வேண்டும். அது தான் இந்த விடயத்தில் முன்னுள்ள ஒரே தீர்வாகும். அந்த தீர்வை நோக்கியதாகவே மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் நிலைப்பாடுகள் இருக்க வேண்டும். இந்த விடயத்தில் நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிப் பதற்கு முடியாது.
ஏனென்றால் காணிகளின் உரித்தை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஆக்கிரமிப்பின் புதியதொரு வடிவம். முன்னரே கூறியிருப்பது போன்று தமிழினத்தின் இருப்பு சார்ந்த விடயம். ஆகவே விட்டுக்கொடுப்புக்களுக்கு எள்ளளவும் இடமில்லை. வர்த்தமானியை மீளப்பெறச் செய்வதே ஒட்டுமொத்த தரப்பின் வெளிப்பாடாக இருக்க வேண்டும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் காணி நிர்ணய திணைக்களம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, காணி ஆணையாளர் நாயக திணைக்களம், மாகாண காணி ஆணையாளர் திணைக்களம், நில அளவையாளர்கள் திணைக்களம் உள்ளிட்டவை காணி விடயங்களை கையாள்வதற்கான பிரதான கட்டமைப்புக்களாக உள்ளன.
இவற்றுடன் பிரதேச செயலகம், மகாவலி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுக்கும் காணி விடயங்களை கையாள்வதற்கான உரித்து காணப்படுகின்றது. குறிப்பாக இக்கட்டமைப்புக்கள் அனைத்துக்கும் மக்களுக் காக காணிகளை பகிர்ந்தளிக்கும் அதிகாரத்தையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன.
அதற்காக, காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம், அரச காணி கட்டளைச் சட்டம், காணிச் (விசேட ஏற்பாடுகள்) சட்டம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுச் சபை சட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை சட்டம், நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டம், மாகாண காணி நியதிச் சட்டம் ஆகியன காணப்படுகின்றன.
அதேநேரம், வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்களம், காணி விடுப்பு அளித்தல் திணைக்களம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், ரயில்வே திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், நெடுஞ்சாலைகள் திணைக்களம், முப்படைகள், இலங்கை துறைமுக அதிகார சபை இலங்கை முதலீட்டுச் சபை ஆகியனவும் காணிகளுக்கான உரித்துக்களை கொண்டிருக்கின்றன.
எவ்வாறாக இருந்தாலும் மேற்படி அனைத்துக் கட்டமைப்புகளுக்கு உரித்துடைய காணிகளின் அளவுகள் தனித்தனியாக எவ்வளவு என்பதற்கான சரியான விடைகள் இதுவரையில் இல்லை. அதுமட்டுமன்றி, பகிர்ந்தளிக்கக்கூடிய, பகிர்ந்தளிக்க முடியாத அரச காணிகளின் அளவுகள் என்ன? தனியார் காணிகளின் அளவுகள் என்ன? ஆகிய கேள்விகளும் பதில்கள் அற்றவையாக மட்டுமல்ல, விடையில்லா விடுகதைகளாகவே நீடிக்கின்றன.
முக்கால் நூற்றாண்டு காலமாக செயற்படும் மேற்படி கட்டமைப்புகளிடத்தில் கள ஆய்வுகள் செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட முழுமையான தரவுத்தளம் தற்போது வரையில் காணப்படவில்லை. காணிகளைக் கையாளும் கட்டமைப்புக்களிடத்தில் காணப்படும் மிகப்பெ ரும் தேக்கநிலை இதுவாகும்.
விசேடமாக போருக்குப் பின்னரான சூழலில் காணிப்பிணக்குகள் நீடிப்பதற்கு குறித்த தேக்க நிலைமையே அடிப்படைக் காரணமாக அமைகின்றது. ஆனால் அதுபற்றிய கரிசனைகளை அரசாங்கம் கொண்டிருப்பதாக தெரியவில்லை.
வடக்கில், யாழ்ப்பாணம் 2,53,283ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்டிருப்பதோடு கிளி நொச்சி 3,16,047.8ஏக்கர் நிலப்பரப்பினையும், முல்லைத்தீவு 6,65,454.79ஏக்கர் நிலப்பரப்பினையும் மன்னார் 4,93,222.3ஏக்கர் நிலப்பரப்பினையும் வவுனியா 4.67,276.3ஏக்கர் நிலப்பரப்பினையும் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் யாழில் 206,574குடும்பங்க ளும் கிளிநொச்சியில் 49,427குடும்பங்களும் வவுனியாவில் 59,030குடும்பங்களும் முல்லைத்தீ வில் 47,455குடும்பங்களும் மன்னாரில் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன. இந்தக் குடும்பங்களின் வாழிடமும், வாழ்வாதாரத்துக்கான வழிகளும் மேற்படி நிலங்களுக்குள்ளேயே இருக்கின்றன.
தொடரும்…..