காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் ஆரம்பித்து 2300ஆவது நாளான இன்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் உள்ள கொட்டகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்போது கருத்துத் தெரிவித்த போராட்டக்காரர்கள், உணவு, மருந்து, சமையல் எரிவாயு, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் கடனுடன், தமிழர்களின் நிலத்தில் இனப்படுகொலை நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்கு பின்னர், இலங்கை இராணுவமும் பௌத்த பிக்குகளும் சட்டவிரோதமாக தமிழர்களிடமிருந்து நிலங்களை அபகரித்து, பௌத்த சிங்களவர்கள் வசிக்காத தமிழர்களின் தாயகம் முழுவதும் மகா சங்க சிங்கள பௌத்த சின்னங்களை கட்டியுள்ளனர்.
தமிழர்களின் தாயகத்தில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னம் சர்வதேச நாணய நிதியத்தின் கடனினால் மேலும் ஊக்குவிக்கப்பட்டதுடன், தமிழ் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள்களை ஊக்குவித்து, எதிர்கால தமிழ்ச் சந்ததியை அழிக்கின்றது என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.