காணமல் போன மற்றைய இரு மீனவர்களின் சடலங்களும் மீட்பு – தமிழகத்தில் கொந்தளிப்பு

204 Views

இலங்கைக் கடல் எல்லையில் இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகுடன் மோதி, ட்ரோலர் படகுடன் மூழ்கி மாயமான நான்கு இந்திய மீனவர்களில் எஞ்சிய இருவரது சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன.

கடந்த 18ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது படகில் மெசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம் ஆகிய நால்வரும் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றனர்.

மீனவர்கள் நெடுந்தீவுக்கு கச்சதீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர். இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்பமுயன்றபோது இலங்கை கடற்படையினரின் ரோந்துக் கப்பல் மீது மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது எனக் கூறப்படுகின்றது.

இதனால் படகில் இருந்த நால்வரும் நடுக்கடலில் மாயமானார்கள். அவர்களை இலங்கைக் கடற்படையினர் நெடுந்தீவுக் கடற்கரைப் பகுதியில் தேடி வந்த நிலையில் நேற்று இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன.

எஞ்சிய இரண்டு பேரைத் தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நெடுந்தீவு அருகே கடற்படையின் மூன்றாம் நாள் தேடுதலின் போது எஞ்சிய மீனவர்களான நாகராஜன், மேசியா ஆகிய இருவரது சடலங்கள் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு எடுத்துவரப்பட்டன

இந்திய மீனவர்களின் சடலங்கள் மல்லாகம் நீதிமன்ற நீதிவானின் உத்தரவின் பேரில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்தியத் துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

இதேவேளை, நடுக்கடலில்; மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்தி வலியுறுத்தியும், மீனவர்களின் உடலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும், இறந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டி ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 24ந்தேதி முதல் சாகும்வரை உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த 18ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம் ஆகிய நால்வரும் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

மீனவர்கள் நெடுந்தீவுக்கு கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப் போவதாக எச்சரித்துள்ளனர் இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்ப முயன்ற போது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மீது மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது.

இதனால் படகில் இருந்த நால்வரும் நடுக்கடலில் மாயமானார் மாயமான மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக இலங்கை கடற்படையினர் தேடி வந்த நிலையில் இன்று வரை நான்கு மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு யாழ்பாணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்கதலைவர்கள் தங்கச்சி மடத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உயிரிழந்த நான்கு மீனவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டு தமிழக மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும். உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், 1974ஆம் ஆண்டு போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டு வரும் இலங்கை அரசை கண்டித்தும் வரும் 24-ஆம் தேதி முதல் கடலோர மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து தங்கச்சிமடத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply